இந்தியா அடுத்தடுத்து தற்சார்பு சாதனை.. கோவேக்சினை தொடர்ந்து சைகோவிடி கொரோனா தடுப்பூசி.. மனிதர்களிடம் பரிசோதனை!

By Asianet TamilFirst Published Jul 17, 2020, 7:27 AM IST
Highlights

“இந்த மருந்து எலி, பன்றி, முயல் போன்ற பிராணிகளிடம் செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையில் பிராணிகளுக்கு தொற்றுநோய் எதிர்ப்பு தன்மை அதிகரித்துள்ளது தெரிய வந்து உள்ளது. மேலும் பிராணிகளிடையே பரவும் வைரஸின் வீரியமும் குறைந்துள்ளது. தடுப்பூசி மருந்து நல்ல பலனை தந்துள்ளது. "
 

கோவேக்சினை தொடர்ந்து மத்திய உயிரி தொழில்நுட்ப துறையின் உதவியுடன் சைடஸ் கெடிலா என்ற நிறுவனம் சைகோவிடி என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது. 
ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர். உடன் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தது. அந்த மருந்தை மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்க்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில்  தேசிய உயிரி மருந்து திட்டத்தின் கீழ் மத்திய உயிரி தொழில்நுட்ப துறையின் உதவியுடன் சைடஸ் கெடிலா என்ற நிறுவனம் சைகோவிடி என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்து விலங்குகளுக்குக் கொடுக்கப்பட்டு வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன.


இதுதொடர்பாக மத்திய உயிரி தொழில்நுட்ப துறை செயலாளர் ரேணு ஸ்வரூப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த மருந்து எலி, பன்றி, முயல் போன்ற பிராணிகளிடம் செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையில் பிராணிகளுக்கு தொற்றுநோய் எதிர்ப்பு தன்மை அதிகரித்துள்ளது தெரிய வந்து உள்ளது. மேலும் பிராணிகளிடையே பரவும் வைரஸின் வீரியமும் குறைந்துள்ளது. தடுப்பூசி மருந்து நல்ல பலனை தந்துள்ளது. 
இதனையடுத்து தடுப்பூசி மருந்து மனிதர்களிடம் இரு கட்டங்களாக செலுத்திப் பரிசோதிக்கும் பணி தொடங்கி உள்ளது. இது உள்நாட்டில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்து. இது மத்திய அரசின் 'ஆத்மநிர்பார் பாரத்' என்ற தற்சார்பு திட்டத்தின் மிக முக்கிய சாதனை. இந்த மருந்து மனிதர்களிடம் நடைபெறும் சோதனையும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று அதில் தெரிவித்துள்ளார். சைடஸ் கெடிலா நிறுவனம் அல்லாமல் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் மருந்து பரிசோதனைகளுக்கு மட்டுமே கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் அனுமதி வழங்கபட்டது குறிப்பிட்டத்தக்கது.

click me!