பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பைத் தகர்க்கும் இந்தியா!

Published : May 08, 2025, 11:26 PM ISTUpdated : May 08, 2025, 11:45 PM IST
பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பைத் தகர்க்கும் இந்தியா!

சுருக்கம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்து தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் லாகூர், முல்தான், சர்கோதா, பைசலாபாத் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்தியாவிற்குள் பல இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. இந்த முயற்சிகள் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டன. வியாழக்கிழமை இரவு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் மேற்கு எல்லைகளில் உள்ள பல்வேறு இடங்களைத் தாக்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் அது வெற்றி பெறவில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் முயற்சி முறியடிப்பு:

ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைக்க பாகிஸ்தான் முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ஆயுதப் படைகள் திறம்பட தடுத்து அழித்தன என்றும், அந்த முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதன்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, அடம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் ஆகிய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்து தாக்கியதாகவும், லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பை அழித்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்:

புதன்கிழமை அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தின் கீழ் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பதில் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது.

"மே 7-8 இரவு, பாகிஸ்தான் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தராலி மற்றும் பூஜ் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க முயன்றது" என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"இவை ஒருங்கிணைந்த UAS ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுத்து நிறுத்தித் தகர்க்கப்பட்டன" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இந்த தாக்குதல்களின் சிதைவுகள் பல இடங்களில் இருந்து மீட்கப்படுகின்றன" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?