எல்லையில் இந்தியாவுடன் கைகோர்த்த சீனா..!! பாகிஸ்தானுக்கு மரண பீதி..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 23, 2019, 11:24 AM IST
Highlights

நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில் இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைகளை  அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன . 

எல்லை தொடர்பான பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள இந்தியா சீனா ஆகிய நாடுகளும் இணைந்து  முடிவெடுத்துள்ளன.  இந்தியா பாகிஸ்தான் இடையே  எவ்வாறு எல்லைப்  பிரச்சனை  இருந்து வருகிறதோ  அதேபோல இந்தியா சீனா இடையே திபெத் எல்லையையொட்டியுள்ள பகுதிகளில்   பிரச்சனை இருந்து வருகிறது . நீண்ட நாட்களாக இருந்து வரும் இப்பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. 

அடிக்கடி  எல்லையில் சீனா அத்துமீறி வருவதுடன் இந்திய எல்லையை  ஆக்கிரமிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது இந்நிலையில்  இந்தியா சீனா இடையிலான இரண்டாவது சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் கடந்த 2 தினங்களாக நடைபெற்றன.   அதில் இந்தியாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜித் தோவால் மற்றும் சீனா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர்  பிரதிநிதிகளாக பங்கேற்றனர் .  நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில் இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைகளை  அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன .

 

எல்லையில் இருக்கும் இருநாட்டு இராணுவ வீரர்கள் இடையே அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கவும் இந்த அமர்வில் முடிவு செய்யப்பட்டுள்ளது .  இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ பல்வேறு தளங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார் .  அத்துடன் இரு  நாட்டு தலைவர்களிடமும் எல்லை விவகாரம் தொடர்பாக புதிய பார்வை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் . 

click me!