டோகா லா பகுதியில் இருந்து ராணுவம் பின்வாங்காது சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை… நீடிக்கும் போர் பதற்றம்…

 
Published : Jul 09, 2017, 08:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
டோகா லா பகுதியில் இருந்து ராணுவம் பின்வாங்காது சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை… நீடிக்கும் போர் பதற்றம்…

சுருக்கம்

india chiana war in border

இந்திய எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை நிராகரித்த இந்தியா, டோகா லா பகுதியில் இருந்து இந்திய ராணுவம் பின் வாங்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின்  முச்சந்திப்பில் இந்திய மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஒரு மாதமாக கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

சிக்கிம் மாநில எல்லைக்குள் நுழைந்து சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்ததால் அங்கு ராணுவத்தை இந்தியா குவித்து உள்ளது.

சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் சீன ராணுவமும் படையை குவித்து இருக்கிறது. இதனால் சிக்கிம் மாநில எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்த நிலையில்,  எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் என சீன அரசு வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சீனா தெரிவித்து இருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன அரசின் அழுத்தத்துக்கு நாங்கள் அடிபணிய போவதில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

டோகா லா பகுதியை ஒட்டிய எல்லை பகுதியில்  நீண்ட தூரத்துக்கு ராணுவ வீரர்களை இந்தியா தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது.  சீன ராணுவத்துடனான மோதல் முடிவுக்கு வரும் வரை இப்போதுள்ள நிலையைத் தொடர இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா - சீனா எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கி கூறினார்.
இதேபோல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் , பிரதமர் மோடியை சந்தித்து இப்பிரச்சனை குறித்து விளக்கினார்

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!