உலக கார் விற்பனையில் மூன்றாம் இடத்தில் இந்தியா... முதலிடத்தை பிடித்தது எந்த நாடு தெரியுமா?

By Narendran SFirst Published Jan 9, 2023, 12:16 AM IST
Highlights

2022 ஆம் ஆண்டில் அதிக கார்களை விற்பனை செய்த பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. 

2022 ஆம் ஆண்டில் அதிக கார்களை விற்பனை செய்த பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. முன்னதாக சர்வதேச அளவில் நடைபெறும் கார்கள் விற்பனை நிலவரம் குறித்த அறிக்கையை நிக்கெய் ஏசியா என்ற நிறுவனம் வெளியிட்டது. அதில், அதிக கார்களை விற்பனை செய்த பட்டியலில் 2021 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி, சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் 2.6 கோடி கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

இதையும் படிங்க: 40 வருட உழைப்புக்குப் பின் ஓய்வு பெறும் ERBE செயற்கைகோள்!

அமெரிக்காவில் 1.5 கோடி கார்கள் விற்பனையாகியுள்ளது. ஜப்பானில் 44 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதனால் சீனா முதலிடத்திலும் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ஜப்பான் மூன்றாம் இடத்திலும் இருந்தது. இந்த நிலையில் ஜப்பானில் கார் விற்பனை திடீரென 42 லட்சமாக குறைந்த சமயத்தில் இந்தியாவில் 42.5 லட்சம் கார்கள் விற்பனையானது.

இதையும் படிங்க: ஜோஷிமத் நிலை என்ன? முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை

இதன் மூலம் ஐப்பானைவிட கூடுதலாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பெட்ரோல், டீசல் கார்களே அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளதாகவும், மின்சார கார்களின் விற்பனை ஒப்பிட்டளவில் மிக குறைவாக உள்ளதாகவும் நிக்கெய் ஏசியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!