40 வருட உழைப்புக்குப் பின் ஓய்வு பெறும் ERBE செயற்கைகோள்!

By SG BalanFirst Published Jan 8, 2023, 4:44 PM IST
Highlights

அமெரிக்கா அனுப்பிய செயற்கைக்கோள் ஒன்று தனது நாற்பது ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

1984ஆம் ஆண்டு புவி கதிர்வீச்சு தொடர்பான ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்பிய ஈஆர்பிஈ (ERBE) செயற்கைகோள் இன்று மீண்டும் பூமிக்குத் திரும்புகிறது. இந்தச் செயற்கைக்கோள் தனது 40 ஆண்டு விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு வருகிறது.

இந்த செயற்கைக்கோள் இந்திய நேரப்படி திங்கட்கிழமை காலை 5:10 மணிக்கு பூமியின் வளிமண்டலத்தில் அடுக்கில் நுழைந்து அழிந்துவிடும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா கணித்துள்ளது.

ஆனால், இந்த நேரத்தைவிட 17 மணிநேரம் கூடுதலாகவோ குறைவாவோ ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்திற்குள் நுழையும்போதே இந்தச் செயற்கைக்கோள் முழுவதும் எரிந்து அழிந்துவிடும் என்பதால் பூமியில் இந்த பாதிப்பும் இருக்காது என நாசா தெரிவிக்கிறது.

இரண்டு ஆண்டுகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் 2005ஆம் ஆண்டு வரை நீட்டித்து உழைத்துள்ளது. பின்னர் அதனை நாசா விஞ்ஞானிகள் பூமிக்குத் திரும்ப வரவழைக்க நடவடிக்கை எடுத்தனர்.

பூமியின் கதிர்வீச்சு சமநிலையில் மனித நடவடிக்கைகளின் விளைவைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்தச் செயற்கைகோள் அளித்துள்ள தரவுகள் பயன்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!