பள்ளி, மருத்துவமனைகளை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்! இந்தியா பகீர் குற்றச்சாட்டு!

Published : May 10, 2025, 11:14 AM IST
பள்ளி, மருத்துவமனைகளை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்! இந்தியா பகீர் குற்றச்சாட்டு!

சுருக்கம்

பாகிஸ்தான் ராணுவம் பள்ளி, மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியா இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

Pakistan targeting attack schools, hospitals in india: இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி , கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். 

அப்போது பேசிய விகரம் மிஸ்ரி, ''பாகிஸ்தான் இந்தியா மீது 26 முறை தாக்குதல் நடத்த முயற்சித்தது. போர் ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது பாகிஸ்தான் தாக்குதல்கள் அனைத்தையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது'' என்று தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து பேசிய கர்னல் சோபியா குரோஷியா, ''நேற்று இரவு முதல் சுமார் 26 முறை இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஜம்மு காஷ்மீரில் பள்ளி, மருத்துவமனைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது.  பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்த பாகிஸ்தானின் முயற்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு வருகிறது'' என்றார்.

தொடர்ந்து பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், ''இன்று அதிகாலை 1.40 மணி முதல் பாகிஸ்தான் ஏவுகணை மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. இதனால் இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் இந்தியாவில் அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!