மத்திய அரசின் 3 தாரக மந்திரங்கள் இதுவே...சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு!!!

By vinoth kumarFirst Published Aug 15, 2018, 10:16 AM IST
Highlights

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார். நாட்டின் 72-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார். நாட்டின் 72-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார். செங்கோட்டையில் 5-வது முறையாக பிரதமர் மோடி கொடியேற்றினார். இந்த விழாவில் ராகுல் காந்தி, மன்மோகன்சிங், தேவகவுடா, அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை; பிரதமர் மோடி

பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின உரையை தொடங்கினார். நாடு புதிய வளர்ச்சி நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. இந்த நாள் நாட்டிற்கு புதிய பலத்தை தந்துள்ளது. சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவதாக கூறினார்.

இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததற்காக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று கூறினார்.  அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் உள்ளது என்றார். சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

REFORM, PERFORM, TRANSFORM இதுவே மத்திய அரசின் தாரக மந்திரங்கள். மேலும் வளர்ச்சி என்பது அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும் என்று சுதந்திர உரையில் தெரிவித்தார். மகாகவி பாரதி கூறியதை போல் எல்லோரும் நல்முறை எய்தும் நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும். பல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம். நலிவடைந்தவர்களும் எந்த தடையும் இன்றி முன்னேற அரசு வழிவகை செய்துள்ளது. 

அரசில் வாரிசு அரசியல் இல்லை. ஜிஎஸ்டியை அமல்படுத்தும் துணிவு இருந்தது. வரி செலுத்துவோர் இந்திய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 2013 ஆண்டு பின்னோக்கி இருந்த நமது நாட்டின் வளர்ச்சி இன்று முன்னேற்றமடைந்துள்ளது. 2014ல் நம்மை பார்த்து சிரித்தவர்கள் ஏராளம்; தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தபோது கைகொட்டி சிரித்தார்கள், ஆனால் இன்று அந்த தூய்மை இந்தியா திட்டம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. 2022க்குள் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். 

நமக்கு கதவுகளை மூடியவர்கள் இப்போது சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கின்றனர். நெடுஞ்சாலை, வான்வழி, கடல்வழி என அனைத்திலும் 
தன்னிறைவு அடைந்து வருகிறோம் என பிரமேர் மோடி கூறியுள்ளார். பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தற்போது 3 பெண் நீதிபதிகள் உள்ளனர் என்றார்.  

ஊழல்வாதிகளுக்கும், கறுப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பு இல்லை. கறுப்பு பணம் பதுக்வோரையும், ஊழல்வாதிகளையும் தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. பாலியல் குற்றங்கள் செய்வோர் மிருகங்கள். அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. பெண்கள் மதிக்க பெற்றோர் கற்றுத்தர வேண்டும். ஆண்களைப் போல் பெண்களும் நிரந்தர அதிகாரம் பெருவார்கள். நாட்டின் நலன் கருதியே அரசு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது என பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

click me!