ஆசை வார்த்தை கூறி பெண் வழக்கறிஞரை கற்பழித்த நீதிபதி…. அதிரடியாக கைது !!

Published : Aug 15, 2018, 09:21 AM ISTUpdated : Sep 09, 2018, 07:48 PM IST
ஆசை வார்த்தை கூறி பெண் வழக்கறிஞரை கற்பழித்த நீதிபதி…. அதிரடியாக கைது !!

சுருக்கம்

ஆசை வார்த்தை கூறி பெண் வழக்கறிஞரை கற்பழித்த நீதிபதி…. அதிரடியாக கைது !!

தெலுங்கானா மாநிலம், சூரியபேட்டையைச் சேர்ந்தவர் ராஜ மல்லிகா. 29 வயது நிரம்பிய இவர் அங்குள்ள சிவில் கோர்ட்டில் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். அதே நீதிமன்றத்தில் சத்திய நாராயண ராவ் என்பவர் சிவில் நீதிபதியாக உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் நீதிமன்றத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் சத்திய நாராயண ராவ், ராஜ மல்லிகாவிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதை  நம்பிய பெண் வக்கீல், பல்வேறு இடங்களுக்குச் சென்று ரூம் எடுத்து தங்கி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.

ஆனால் நீதிபதி சத்திய நாராயண ராவுக்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதை அறிந்த ராஜ மல்லிகா அவரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு நீதிபதி மறுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ மல்லிகா இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்மீது போலீசார் கற்பழிப்பு தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி சத்தியநாராயணராவை போலீசார் கைது செய்தனர்.  கற்பழிப்பு வழக்கில் நீதிபதி கைது செய்யப்பட்டிருப்பது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!