நாட்டு மக்களின் நலன் என்பது நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை முன்வைத்தே ஆராயப்படுகிறது. ஒரு நாட்டில் இந்த இரண்டும் நன்றாக இருக்கும்போது மக்கள் தங்களது உரிமையை பெற்று வாழ்கின்றனர் என்று அர்த்தமாகிறது. அந்த வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்ன செய்தது என்று பார்க்கலாம்.
நடப்பாண்டின் பட்ஜெட்டில், எல்லை சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்க இந்தியா ரூ. 15,000 கோடி செலவழிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எல்லைச் சாலைகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் 50 பேர் செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுவே கடந்த 2013-2014 ஆம் ஆண்டில் 4,102 ரூபாயாக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு இருந்தது. 2019-20 ஆம் ஆண்டில் இந்த நிதி ஒதுக்கீடு 7,737 ரூபாயாக அதிகரித்து இருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த சண்டையும் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது. 2019ஆம் ஆண்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே ராஜ்நாத் சிங் எல்லை விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
undefined
இது என்னது சுதந்திர தின செல்பி; எடுத்துக் குவிக்கும் மக்கள்.. ரெக்கார்டு பிரேக்!
கல்வான் பள்ளத்தாக்கில் 2019ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் பாதுகாப்புத்துறைக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. முந்தைய ஆண்டுகளில் ஒதுக்கி இருந்ததைவிட 2022-2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் எல்லை பாதுகாப்புக்கு என்று மட்டுமே மத்திய 12,340 கோடியை ஒதுக்கியுள்ளது. ஏப்ரல் 2019 முதல் எல்லையில் 3,700 கிமீ சாலைகளையும், மொத்தம் 17,411 மீட்டர் நீளம் கொண்ட 266 பாலங்களையும் மத்திய அரசு அமைத்துள்ளது. 2008 மற்றும் 2015 ம் ஆண்டுக்கு இடையில் இந்தியா 4,422 கிமீ எல்லைச் சாலைகளை ஆண்டுக்கு 632 கிமீட்டர் என்ற அளவில் அமைத்து இருந்தது. ஆனால், தற்போதைய எல்லை அச்சுறுத்தலை உணர்ந்து கொண்டு வேகத்தை 856 கிமீட்டராக அதிகரித்துள்ளது. 2015 - 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 6,848 கிமீ சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 2008-2015 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டதை விட, 2.5 மடங்கு அதிகமாக, 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 3,066 மீ உயரத்திற்கு பாலங்கள் அமைப்பதில் முன்னேற்றம் காணப்பட்டது.
நிலவில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் சந்திரயான்-3! 3வது உயரக் குறைப்பு நடவடிக்கை நிறைவு
எல்லையில் 2019 ஆம் ஆண்டு முதல் சுரங்கப்பாதைகளை விரைவாக உருவாக்குவதற்கு மோடி அரசு அக்கறை காட்டி வருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை எல்லையில் இரண்டு சுரங்கப்பாதைகள் மட்டுமே முடிக்கப்பட்ட நிலையில், மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியில் நான்கு சுரங்கப்பாதைகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன, ஏழு சுரங்கப்பாதைகளுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. மேகாலயாவில் சோனாபூர் சுரங்கப்பாதை, சிக்கிமில் தேங் சுரங்கப்பாதை, இமாச்சலப் பிரதேசத்தில் அடல் சுரங்கப்பாதை, உத்தரகாண்டில் சம்பா சுரங்கப்பாதை மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நெச்சிபு மற்றும் சேலா சுரங்கப்பாதை ஆகியவை முடிக்கப்பட்ட சுரங்கப்பாதைகள் ஆகும்.
அருணாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இடங்களில் 10 சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் மேலும் ஏழு சுரங்கப்பாதைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இதுவரை 64 பாலங்கள் மற்றும் 21 சாலைகள் அடங்கிய மொத்தம் 90 உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் 103 எல்லை திட்ட சாதனையை விரைவில் முறியடிக்கும். கலத்தேயா ஆற்றின் மீது நிகோபார் தீவில் உள்ள லக்ஷ்மி நகரை இணைக்க பூட்டானுக்கு அருகில் 11,000 அடி உயரத்தில் சிக்கிமில் பாலம் அமைக்கப்படுகிறது. இது மிகவும் சவாலான பணியாக கருதப்படுகிறது. எல்லையின் பாதுகாப்பை உணர்ந்து மோடி அரசு பல்வேறு உத்திகளில் இறங்கியுள்ளது.