நாடு தழுவிய வேலை நிறுத்தம்….. மோடி அரசுக்கு வருமானவரித்துறையினர் திடீர் எச்சரிக்கை….

First Published Oct 21, 2017, 5:27 PM IST
Highlights
income tax dept employees announce strike


மத்திய நேரடி வரிகள் வாரியம் புதிய அதிநவீன ெமன்பொருளை நடைமுறைப்படுத்துவதைக் கண்டித்தும், வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் ஆட்களை தேர்வு செய்வதற்கு எதிராகவும், வருமான வரித்துறை மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு நாடு தழுவியவேலை நிறுத்தம் செய்யப்போவதாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமானவரித்துறையில் இப்போது, “ஏ.எஸ்.டி.” எனும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நீக்கிவிட்டு, நவீன முறையில், அதிக அம்சங்கள் கொண்ட “ஐ.டி.பி.ஏ.” எனும் மென்பொருளை 7 மெட்ரோ நகரங்களில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், இந்த மென்பொருளில் பயிற்சி பெறுவதற்காகவும், வருமான வரித்துறையினருக்கு உதவவும், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு வருமானவரித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதிய மென்பொருளை நடைமுறை 3 மாதத்துக்கு பின்பே, நடைமுறைப்படுத்த வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் யாரும் பணிக்கு அமர்த்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வரும் 31-ந்தேதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். 

இல்லாவிட்டால், நாடுதழுவிய போராட்டம் நடத்தப்போவதாக வருமானவரித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த புதிய மென்பொருளை டி.சி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது, ஆரக்கிள் தளத்தில் இந்த மென்பொருள் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.டி.பி.ஏ. மென்பொருள் நடைமுறைக்கு வந்துவிட்டால், நிலுவையில் உள்ள அனைத்து வருவமானவரித்துறை வழக்குகளும், மின்அஞ்சல் மூலமே தீர்க்கப்படும், காலதாமதம் தவிர்க்கப்படும். அதேசமயம், பயிற்சி பெறவ நீண்டகாலம் தேவைப்படும்

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறுகையில், “ நாடுதழுவிய வேலை நிறுத்தத்துக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. இம்மாதம் இறுதிவரை காலக்கெடு கொடுத்துள்ளோம். இது தொடர்பாக விரைவில் ஆய்வுக்கூட்டம் நடத்தி தேதி முடிவு செய்யப்படும். இப்போதுள்ள சூழலில் புதிய மென்பொருளில் பணி செய்ய ஊழியர்கள் விரும்பவில்லை.

 இதை நடைமுறைப்படுத்தும்போது ஏற்கெனவே செய்து வரும் பணிகளும் பாதிக்கும், ஒப்பந்த பணியாளர்களாக வருபவர்களும் எந்த வேலையையும் செய்யமுடியும். இதனால், வருமானவரித்துறையின் ஒட்டுமொத்த பணியும் முடங்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இம்மாத இறுதிக்குள் மத்திய அரசு தனது முடிவை அறிவிக்காவிட்டால், நாடுதழுவிய போராட்டம் நடத்தும் தேதி அறிவிக்கப்படும் என வருமானவரித்துறை ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  

மேலும், வருமானவரித்துறையில் 32 ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன, அதை நிரந்தரமான முறையில் நிரப்பாமல், ஒப்பந்த அடிப்படையில் 10 ஆயிரம் பேரை நிரப்பி, புதிய மென்பொருளுக்காக பழக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 

 

 

click me!