வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைக்க தேவையில்லை !! ரிசர்வ் வங்கி அதிரடி !!!

 
Published : Oct 21, 2017, 09:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைக்க தேவையில்லை !! ரிசர்வ் வங்கி அதிரடி !!!

சுருக்கம்

no need to connect adar number to bank account

பொது மக்கள் தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, எந்த உத்தரவையும்  பிறப்பிக்கவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 .மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்கு பவர்களும், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள்  ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, டெல்லியில் செயல்படும், செய்தி இணைய தளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டது.

அதற்கு,   வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை என பதில் அளித்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தாண்டு, ஜூன், மாதம் , மத்திய அரசு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்கள், புதிதாக கணக்குதுவக்குபவர்கள், தங்கள் ஆதார் எண்ணையும், பான் எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!