மீண்டும் ரயில் விபத்து..! இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன

 மேற்கு வங்கம் மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரெயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 8 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

In West Bengal, two freight trains collided with each other causing chaos

மீண்டும் ரயில் விபத்து

ஒடிசா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 290க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இன்னும் 80க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. இந்த விபத்து நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்த நிலையில், மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரெயில் நிலையம் அருகில் பராமரிப்பு பணிக்காக சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.

Latest Videos

In West Bengal, two freight trains collided with each other causing chaos

தூக்கி வீசப்பட்ட ரயில் விபத்து

இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்த மற்றொரு சரக்கு ரயிலுக்கு சிவுப்பு விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிவப்பு விளக்கை சிக்கனலை மீறி ஒண்டாகிராம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த சத்தத்தோடு சரக்கு ரயில் தரம்புரண்டது. இதில் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டது. சரக்கு ரயில் என்பதால் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் இந்த விபத்தில் சரக்கு ரயில் ஒட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இதன் காரணமாக  கரக்பூர் - பாங்குரா - ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில் பெட்டிகளை மீட்டு பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

மணிப்பூர் வன்முறை: அமித் ஷா தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டத்தில் விவாதம்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image