மணமகளுக்கு கவரிங் நகையை பரிசளித்த மாமியார்...! திருமணத்தை மணப்பெண் நிறுத்தியதால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published May 23, 2022, 8:53 AM IST
Highlights

திருமண நிகழ்வின் போது மாமியார் மணப்பெண்ணிற்கு தங்க ஆபரணங்களை பரிசளித்துள்ளார். அந்த நகையை சோதித்த பார்த்த மணப்பெண் தங்க நகை போலியானது என தெரியவந்ததையடுத்து திருமணம் செய்ய மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொய் சொல்லி திருமணம்

திருமணங்கள் ஆயிரம் காலத்து பயிர், நூறு பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது பழைய பழமொழியாகும், அந்த வகையில் திருமணப்பெண்ணிற்கு 100 சவரன்  நகைகள் தருகிறோம், 200 சவரன் தருகிறோம் என கூறி திருமணத்தை பேசி முடிப்பர். அந்த வகையில் ஒரு திருமண நிச்சய நிகழ்வில் மணமகளுக்கு 150 சவரன் நகைகள் தருவதாக  மணமகன் வீட்டார் கூறி திருமணத்தை உறுதி செய்த நிலையில், திருமண தினத்தில் போலி நகையை கொடுத்து மணமகன் வீட்டார் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்ஹார் கிராமத்தில் திருமணத்திற்கு முன்பு பராத் விழா நடைபெற்றுள்ளது. 


கவரிங் நகைகளை கொடுத்த மாமியார்

இந்த விழாவில் மணமகன் வீட்டார், மணப்பெண்ணிற்கு நகைகள் பரிசாக வழக்கியுள்ளனர். இந்த நகை மீது மணப்பெண் வீட்டாருக்கு சந்தேகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து மணப்பெண் தனது தந்தையின் நண்பரான நகை வியாபாரியிடம் நகை உண்மையானதா? என சரிபாரக்கும் படி கூறியுள்ளார். அந்த நகை வியாபாரி நகையை சோதனை செய்து பார்த்த போது நகை போலியானது என தெரியவந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த மணப்பெண், மணமகன் வீட்டாரிடம் ஏமாற்றி விட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த இடமே பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்ய மறுத்த  மணப்பெண் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் மணமகன் வீட்டார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். 

திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

திருமண மண்டபத்தில் காலையில் ஏற்பட்ட பிரச்சனை மாலை வரை நீடித்துள்ளது. இதனையடுத்து தகவல் கிடைத்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். அப்போது மணமகன் வீட்டார் உண்மையான நகைகளை தருவதாக உறுதியளித்ததையடுத்து திருமணம் நடைபெற்றது. போலி நகைகைள் கொடுத்து திருமணம் செய்ய இருந்த நிகழ்வு கான்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!