“எங்களுக்கு முழு விவரங்கள் தேவை. இது ஒரு அசாதாரண சம்பவமாக கருதப்பட்டு, அதற்குரிய வகையில் கையாளப்படும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சமீபத்தில் கர்நாடகாவின் பெலகாவியில் மகன் ஓடிப்போனதற்காக அவரது தாயை நிர்வாணப்படுத்தி மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் நடந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், மகாபாரத காலத்தில்கூட இப்படி நடந்ததில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாபாரதத்தில் துரியோதனின் அவையில் துச்சாதனன் திரௌபதியின் ஆடையைக் களையும் போது பகவான் கிருஷ்ணர் வந்து திரவுபதியின் மானத்தைக் காப்பாற்றியது போல யாரும் இன்று பெண்களைக் காப்பாற்ற வரமாட்டார் என்று நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
undefined
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, "இன்றைய உலகில், துரியோதனன்கள் / துஷாசனங்கள் வந்தால், எந்த கிருஷ்ணரும் காப்பாற்ற வரமாட்டார்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
வீரதீரச் செயல்கள் புரிந்த தமிழக ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய விருது!
ஷேக்ஸ்பியர் மற்றும் பாடலாசிரியர் சாஹிர் லூதியான்வியின் வரிகளையும் மேற்கொள் காட்டிய நீதிபதிகள், விசாரணை விவரங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த வழக்கில் கூடுதல் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 42 வயதான பெண் டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு நிர்வாணப்படுத்தப்பட்டு வீட்டை விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இழுத்துச் சென்ற கும்பல் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாக்கியுள்ளனர்.
வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணுடன் அந்தப் பெண்ணின் மகன் ஓடிப்போனதை அடுத்து பெண்ணின் குடும்பத்தினர் இந்தக் மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தாய் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊடகங்களில் வெளியான செய்திப் பார்த்து, கர்நாடக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கறிது. வழக்கில் அடுத்த விசாரணையின்போது கூடுதல் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பெலகாவி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“எங்களுக்கு முழு விவரங்கள் தேவை. இது ஒரு அசாதாரண சம்பவமாக கருதப்பட்டு, அதற்குரிய வகையில் கையாளப்படும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
"என்னிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்தப் பெண்மணி இரண்டு மணிநேரம், ஆடைகள் கழற்றப்பட்டு, மின்கம்பத்தில் கட்டப்பட்டு, மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை மனிதர்கள் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது. விலங்குகள்கூட இதைவிடச் சிறப்பாக நடந்துகொள்கின்றன” என்று தலைமை நீதிபதி வரலே கூறியிருக்கிறார்.
குழந்தையைத் தத்தெடுப்பது ஈசிதான்! மத்திய அரசின் பிரத்யேக இணையதளம் அறிமுகம்