குழந்தையைத் தத்தெடுப்பது ஈசிதான்! மத்திய அரசின் பிரத்யேக இணையதளம் அறிமுகம்

By SG Balan  |  First Published Dec 15, 2023, 8:33 AM IST

குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான நடைமுறையை எளிதாக்க 'கேரிங்க்ஸ்' (CARINGS) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டுள்ளார்.


குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, நடைமுறை எளிதாகி இருப்பாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டிருக்கிறார்.

குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள சட்டப்பூர்வமாக சிக்கல்களைப் போக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

அதில், 5 ஆண்டுகள் குழந்தையைப் பராமரித்து சான்று பெற்ற பின்புதான் தத்தெடுக்க முடியும் என்ற விதி மாற்றப்பட்டுள்ளதாகவும் இப்போது 2 ஆண்டுகளிலேயே தத்தெடுப்பதற்கான சான்று பெற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தையைத் தத்தெடுக்கும் பெற்றோர் பிற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டு, சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

வீரதீரச் செயல்கள் புரிந்த தமிழக ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய விருது!

குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான நடைமுறையை எளிதாக்க 'கேரிங்க்ஸ்' (CARINGS) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் இதன் மூலம் தத்தெடுக்கும் நடைமுறையில் தாமதம் ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா மற்றும் வெளிநாட்டவர்களால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12,877 என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், 2020-2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகபட்சமாக 3,142 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டன என்றும் 2022-2023ஆம் ஆண்டில் வெளிநாட்டினரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 431 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.

நடப்பு ஆண்டில் டிசம்பர் 10ஆம் தேதி வரை வரை இந்தியாவில் 2,248 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 248 குழந்தைகள் வெளிநாட்டினரால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தனது பதிலில் எடுத்துரைத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு ஒரு இந்து அதிபர் ஆக முடியுமா? விவேக் ராமசாமி சொன்ன 'நச்' பதில்!

click me!