உலகிலேயே செல்போன் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எலக்ட்ரானிக்கல் பிளான்ட் தொடங்கி வைக்க உள்ளதாகவும் இதனால் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகிலேயே செல்போன் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எலக்ட்ரானிக்கல் பிளான்ட் தொடங்கி வைக்க உள்ளதாகவும் இதனால் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க ஊக்குவித்து வருகிறது, இதன் ஒரு பகுதியாக தைவான் நாட்டைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்க உள்ளது.
undefined
இதையும் படியுங்கள்: நீ எல்லாம் மூத்த அமைச்சரா.. உன் அப்பன் வீட்டு பணமா.?? ஓசி என பேசிய பொன்முடியை ஓங்கி அடித்த நாராயணன் திருப்பதி
சென்னை அருகே செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ளது தொழிற்பூங்காவில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். இதில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இதற்காக முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
Reached & received a warm welcome at the by Karyakartas led by pic.twitter.com/b1V47TOh3Y
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI)இதையும் படியுங்கள்: VCK- RSS-ம் ஒன்றா.?? எங்களுக்கு அனுமதி மறுப்பது நியாயமா.? ஸ்டாலின் அரசுக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்த திருமா.
தமிழகத்தில் எலக்ட்ரானிக்கல் பிளான்ட் தொடங்கி வைக்க உள்ளேன், 6,500 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளது, இதன் மூலம் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், குறிப்பாக தமிழநாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் எலக்ட்ரானிக்கல் தொழில்களில் வேகமாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்ற போது 87 சதவீத செல்போன்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அதில் 97% செல்போன்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன.
இதையும் படியுங்கள்: செங்கல்பட்டில் இன்று பெகட்ரான் டெக்னாலஜியின் மொபைல் தயாரிப்பு தொழிற்சாலை திறப்பு; அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
செல்போன்கள் தயாரிப்பில் உலகிலேயே இந்தியா 2வது நாடாக உள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் தொடங்கி வைக்கப்படும் 5வது தொழிற்சாலை இதுவாகும், இது பிரதமர் மோடியின் வளர்ச்சி மாடல் ஆகும், அடுத்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், பிரதமர் மோடியின் முயற்சியால் அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகள் கவரப்பட்டு வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி வரை முதலீடுகள் அதிகரிக்கும், இந்நிலையில்தான் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் செல்போன் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பாரத பிரதமரின் PLI திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு தொழில் பூங்காவில் அமைய உள்ள தொழிற்சாலை தமிழகத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
- மத்திய இணை அமைச்சர் ... pic.twitter.com/bfjIO3wqDo
பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் பல நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. பிரதமர் மோடி அரசு மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் அரசாக உள்ளது. மோடி அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாரத பிரதமரின் PLI திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு தொழில் பூங்காவில் அமைய உள்ள தொழிற்சாலை தமிழகத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
- மத்திய இணை அமைச்சர் ... pic.twitter.com/bfjIO3wqDo