விஜயநகர மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் 4 ரயில் விபத்துகள்: 67 பேர் பலியான சோகம்!

By Manikanda Prabu  |  First Published Oct 31, 2023, 10:56 AM IST

விஜயநகர மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் 4 பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளனர்


ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் 4 பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயடைந்துள்ளனர். கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று நடந்த விபத்தும் இதில் அடங்கும்.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் ராயகடா பயணிகள் ரயில், பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை நேற்று ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் படு காயமடைந்துள்ளனர்.

Latest Videos

undefined

இதற்கு முன்பு 3 ரயில் விபத்துக்கள் விஜயநகரம் மாவட்டத்தில் நடந்துள்ளன. 2013ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற ரயில் விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர். விஜயநகரம் அருகே உள்ள கோட்லம் ரயில் நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஆலப்புழா-தன்பாத் ரயிலில் பயணித்த பயணிகள், ஏசி பெட்டிகளில் இருந்து புகை வந்ததைக் கண்டு தண்டவாளத்தில் குதித்தனர். அந்த சமயத்தில் எதிரே வந்த ராயகடா-விஜயவாடா பயணிகள் ரயில், தண்டவாளத்தில் இருந்த பயணிகள் மீது மோதியது.

தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்.. 2 சிவசேனா எம்.பிக்கள் ராஜினாமா.. அதிர்ச்சியில் ஏக்நாத் ஷிண்டே

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி ஜக்தல்பூரிலிருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு சென்ற ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள குனேரு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதில் 41 பேர் கொல்லப்பட்டனர். 68 பேர் காயமடைந்தனர். அந்த விபத்தில் ரயிலின் டீசல் என்ஜின் உள்பட ஒன்பது பெட்டிகள் தடம் புரண்டன. அதில், 3 பெட்டிகள் அதிவேகமாக தடம்புரண்டதால், அருகே இருந்த ரயில் பாதையில் வந்த சரக்கு  ரயில் மீது மோதியது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஜி சிகடம் மண்டலத்தில் உள்ள படுவா ரயில்வே கேட் அருகே கோனார்க் எக்ஸ்பிரஸ் மோதியதில் ஐந்து பயணிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். செகந்திராபாத்-கவுகாத்தி அதிவிரைவு விரைவு ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் பக்கத்து ரயில்வே ட்ராக்கில் இருந்தனர். அந்த பாதையில் எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது.

click me!