
கடந்த 10 மாதங்களில் 100 முறை பந்த் நடத்திய விசித்திர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இந்த போராட்டம் நடைபெறுகிறது.
படித்தவர் எண்ணிக்கை மற்றும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று பேர் எடுத்த கேரள மாநிலத்திற்கு தற்போது ஒரு புது சாதனையை படைத்துள்ளது.
அதாவது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பந்த்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்ற அமைப்பு கேரளாவில், கடந்த 10 மாதங்களில் நடந்துள்ள பந்த்துக்கள் குறித்து ஆய்வு நடத்தியது.
அதில் ஒரு சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது இதுவரை 99 முறை 'பந்த்' நடந்த பட்டுள்ளது என்பதும் இன்று நடக்கும் பந்த் 100 வது பந்த் எனவும் தெரியவந்துள்ளது.
இதுவரை பா.ஜ., சார்பில், 38 முறையும், மார்க்சிஸ்ட் மற்றும் காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில், தலா, 14 முறையும், 'பந்த்'க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று, காங். சார்பில் 100வது முறையாக 'பந்த்'க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.