மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு... அப்பாடி மரண கலாய்… வட கொரியா அதிபருடன் ஒப்பிட்டு ‘போஸ்டர்கள்’

 
Published : Oct 16, 2017, 08:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு...  அப்பாடி மரண கலாய்… வட கொரியா அதிபருடன் ஒப்பிட்டு ‘போஸ்டர்கள்’

சுருக்கம்

UP police book 22 for putting up poster comparing Modi with Kim

பிரதமர் மோடியை வடகொரியா சர்வாதிகாரி அதிபருடன் ஒப்பிட்டு உ.பி.யில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இதையொட்டி 22 வணிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பா.ஜனதா கட்சி ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே பிரதமர் மோடிக்கு இப்படி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது அந்த கட்சிக்கும், அவருக்கும் கடும்பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியை வடகொரியா சர்வாதிகாரி அதிபரான கிம் ஜாங் அன்னுடன் ஒப்பிடும் வாசகம் அடங்கிய போஸ்டர்கள், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒட்டப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக போலீசார் 22 வணிகர்களுக்கு எதிராக போலீசார் கிரிமினல் வழக்கை பதிவு செய்து உள்ளனர். போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பிரவின் குமார் என்பவரை போலீஸ் கைது செய்து உள்ளது.

விரைவில் மற்றவர்களையும் கைது செய்வோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, கைது நடவடிக்கையை கண்டித்து, வணிகர்கள் தரப்பில் இவ்வருடம் தீபாவளியை கொண்டாடப்போவது இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் மேலும் சரிவை சந்தித்து உள்ளது என விமர்சனம் எழுந்து உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து உள்ளது.

இந்தநிலையில் கான்பூரில் பிரதமர் மோடியை, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னுடன் ஒப்புட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த போஸ்டரில் ஒரு புறத்தில் கிம் படமும், மற்றொரு புறத்தில் மோடியின் படமும் இருக்கிறது.

‘‘போஸ்டர்களில் உலகத்தை அழிக்காமல் ஓயமாட்டேன்’’ என கிம் சொல்வது போன்றும், ‘‘வியாபாரத்தை அழிக்காமல் விடமாட்டேன்’’ என்று பிரதமர் மோடி சொல்வது போல் வாசகம் இடம் பெற்று உள்ளது.

கான்பூரில் வங்கிகள் சில்லரை காசுகளை டெபாசிட் செய்ய அனுமதிக்காததை கண்டித்து வணிகர்கள் தரப்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

இஸ்ரோவின் 'பாகுபலி' ராக்கெட் சாதனை! வெயிட்டான சாட்டிலைட் வெற்றிகரமாக ஏவப்பட்டது!
ரூ.1 லட்சத்துக்கு காண்டம், ரூ.4 லட்சத்துக்கு நூடுல்ஸ்.. 2025ல் இந்தியர்கள் செய்த வினோத ஆர்டர்கள்!