
இந்தியா பலவீனமான நாடு அல்ல என்பதை சீனா உணர்ந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
2 எல்லை பிரச்சினை
இந்திய எல்லையில் பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவை தொடர்ந்து சீண்டி வருகின்றன. காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது.
இதனால் எல்லையோர கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதியில் சாலை அமைத்து சில பகுதிகளை சீனா ஆக்கிரமிக்க முயன்றது.
உ.பி.யில் நிகழ்ச்சி
இருப்பினும் மத்திய அரசின் உறுதியான செயல்பாடுகள் சீனாவின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பாரதிய லோஹி மகாசபா என்ற அமைப்பின் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நேற்று நடத்தப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-
ராணுவ வலிமை
நம் நாட்டின் எல்லைப் பகுதிகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. இந்தியா பலவீனமான நாடு அல்ல என்பதை சீன உணர்ந்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு மிகவும் வலிமை வாய்ந்ததாக மாறி வருகிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் ஓங்கியுள்ளது. நாளுக்கு நாள் நாட்டின் ராணுவ வலிமை அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் முயற்சி
காஷ்மீர் அமைதியை நிலை நிறுத்த மத்திய அரசு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதனை தடுக்க தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை பாகிஸ்தான் எடுக்கிறது. ஆனால் நம் ராணுத்தினர் நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 தீவிரவாதிகளை கொன்று குவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.