3 பரோட்டா சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு; வாழ்நாள் முழுவதும் இலவசம் - நூதன விளம்பரத்தால் ஒட்டலில் குவியும் வாடிக்கையாளர்கள்

First Published Dec 26, 2017, 4:11 PM IST
Highlights
In the 50 minutes 3 paratas will have to pay Rs. One lakh gift


டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில், 50 நிமிடங்களில் 3 பரோட்டா சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு என்றும், வாழ்நாள் வரை சாப்பாடு இலவசம் என்ற நூதன விளம்பரத்தால் கூட்டம் அலைமோதுகிறது. 

ஆனால், அதில் சில கட்டுப்பாடுகளும் இருக்கிறது. இதைக் கேட்டால்தான் பலர் பின்வாங்குகிறார்கள். என்ன என்றுகேட்கிறீர்களா?. படியுங்கள்....

ரூ.400 
டெல்லியில் ரோடாக் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது “தபாஸ்யா பரோட்டா கடை’’. பரோட்டாவுக்கு புகழ்பெற்ற இந்த ஒட்டலில் ரூ.180லிருந்து ரூ.400 வரை பரோட்டா கிடைக்கிறது .

2 கிலோ

இங்கு செய்யப்படும் 400 ரூபாய் பரோட்டா ஒன்று 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது. உள்நாட்டு ெநய் அதிகமாக ஊற்றியும், தரமான மாவினால் செய்யப்படும் இந்த மூன்று பரோட்டாக்களை 50 நிமிடங்களுக்குள் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

இலவசம்
இதோடு வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு இலவசமாக பரோட்டா தரப்படுகிறது. ஆனால் மூன்று பரோட்டா சாப்பிட முடியாமல் போனால் சாப்பிட்ட வரையிலான பணத்தை வாடிக்கையாளர் கொடுத்துவிட வேண்டும். இதுதான் விதிமுறையாகும். 

அந்த பகுதியில் தபாஸ்யா பரோட்டோ கடை இந்த சவாலுக்காகவே புகழ்பெற்று விளங்குகிறது. இந்த சவாலை ஏற்று பலர் சாப்பிட முன்வந்து ஏராளமானோர் தோற்றுள்ளனர்.

சாப்பிட்டால் பரிசு

ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகாராஜ் சிங் இருமுறை சாப்பிட்டு பரிசுகளை வென்றுள்ளார். அரியானா மாவட்டம் ரோடாக் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வினி என்பவரும் சாப்பிட்டு பரிசு ெவன்றுள்ளார். . இதில் ஒருவர் 50 நிமிடங்களில் 4 பரோட்டா சாப்பிட்டு வியக்க வைத்துள்ளார். பரிசு சலுகை காரணமாக கடையில் எப்போதும் நல்ல கூட்டம் உள்ளது.

50 வகையான பரோட்டா

இது குறித்து கடையின் உரிமையாளர் ராகேஷ் கலாவாத் கூறுகையில், “ எங்கள் கடையின் முன் எழுதிவைக்கப்பட்டுள்ள சவாலைப் பார்த்து பலர் ஈர்க்கப்பட்டு, இங்கு வந்து சாப்பிடுகிறார்கள். பரிசுக்காக முயற்சிக்கிறார்கள். பலர் முயற்சி செய்து தோற்றுப் போகிறார்கள்.

எங்கள் கடையில் பரோட்டா முழுவதும் சுத்தமான உள்நாட்டு நெய், தரமான மாவினால் செய்யப்படுகிறது. ஒரு பரோட்டா எடை 2 கிலோவும், 2½ அடி சுற்றளவிலும் இருக்கும். எங்கள் கடையைப் பார்த்து பலரும் இதுபோல் சவால் விடும்வகையில் கடை நடத்துகிறார்கள். ஆனால், அங்கு கூட்டம் வருவதில்லை. எங்கள் கடையில் 50 வகையான பரோட்டாக்களை செய்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் விற்கப்படுகிறது’’ என்றார்.

click me!