Kerala Trans Couple:இந்தியாவில் முதல்முறை ! கேரளாவின் மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறந்தது: வீடியோ

Published : Feb 08, 2023, 02:16 PM ISTUpdated : Feb 08, 2023, 04:26 PM IST
Kerala Trans Couple:இந்தியாவில் முதல்முறை ! கேரளாவின் மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறந்தது: வீடியோ

சுருக்கம்

கேரள மாநிலத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவருக்கும், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஜோடிக்கும் இன்று குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் இதுபோல் மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறப்பது இதுதான் முதல்முறையாகும்.

 கேரள மாநிலத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய, பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் இதுபோல் மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறப்பது இதுதான் முதல்முறையாகும்.

கேரளவைச் சேர்ந்த ஜியா பவல். இவர் ஆணாகப் பிறந்து பின்னர் திருநங்கையாக மாறியவர். அதே மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஜஹத். இவர் பிறப்பில் பெண்ணாக இருந்து பின்னர் ஆணாக மாறியவர்.
இருவரும் திருமணம் செய்து  கடந்த 3 ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு என்ன பதில்? அதானி – மோடி படங்களைக் காட்டி ராகுல் காந்தி சரமாரி கேள்வி

இதில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய ஜஹத்துக்கும், ஆணாக இருந்து திருநங்கையாக மாறிய ஜியா பவலுக்கும் குழந்தைப் பெற்றுக்கொள்ளமுடிவு செய்தனர்.

இது தொடர்பாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினரிடம் ஆலோசனை பெற்றனர். இதில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஜஹத்துக்கு ஹார்மோன் அறுவை சிகிச்சை செய்தபோது, அவரின் மார்பகங்கள் மட்டும் நீக்கப்பட்டன, ஆனால் கருப்பை நீக்கப்படவில்லை. இதனால் ஜஹத் குழந்தை பெறுவது சாத்தியம் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, செயற்கை முறையில், ஜஹத் வயிற்றியல் கருஉண்டாக்கப்பட்டது. தான் கர்ப்பமாக இருப்பது குறித்து ஜஹத் சமீபத்தில் இஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட அதுவும் வைரலானது. பெண்ணாக இருந்து ஆணாகமாறிய ஒருவரின் வயிற்றில் 8 மாத கரு வளர்ந்திருப்பது வியப்பாகப் பேசப்பட்டது. 

புதிய வரலாறு! ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் தேஜாஸ் போர் விமானத்தை தரையிறக்கி சாதனை

ஜஹத்துக்கும், பவலும் இணைந்து இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகின. எல்ஜிபிடிக்கு ஆதரவாக இருக்கும் அனைவரும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜஹத்துக்கு இன்று காலை 9.30 மணிஅளவில் குழந்தை பிறந்துள்ளதாக பவல் தெரிவித்துள்ளார். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவர் குழந்தை பெற்றுக்கொண்டது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.  

இது குறித்து பவல் கூறுகையில் “ ஜஹத்துக்கு அறுவை சிகிச்சை முறையில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை, ஜஹத் இருவரும் நலமுடன் உள்ளனர். ஜஹத் தந்தையாக வேண்டும், நான் தாயாக வேண்டும் என்ற எங்கள் கனவு நனவாகியுள்ளது. மாற்றுப்பாலினத்தவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வது இந்தியாவில் இதுதான் முதல்முறையாகும்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், ஜஹத்துக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதைக் கூற பவல் மறுத்துவிட்டார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!