Modi Documentry: ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிபிசி-யின் பிரதமர் மோடி ஆவணப்படம் ஒளிபரப்பு:ஏபிவிபி பதிலடி

By Pothy RajFirst Published Jan 27, 2023, 9:29 AM IST
Highlights

தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிபிசி தயாரித்த பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது. இதற்குப் பதிலடியாக ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி அமைப்பு, காஷ்மீர் பைல்ஸ் படத்தை வளாகத்தில் திரையிட்டனர் 

தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிபிசி தயாரித்த பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது. இதற்குப் பதிலடியாக ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி அமைப்பு, காஷ்மீர் பைல்ஸ் படத்தை வளாகத்தில் திரையிட்டனர் 

இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பரபரப்பான, மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
ஹைதராபாத் பல்கலைக்கத்தில் உள்ள மாணவர்அமைப்பான சகோதரத்துவ இயக்கம், கடந்த 21ம் தேதி பிபிசியின் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட்டனர். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், எந்த விதமான தகவலும் தெரிவிக்காமல் ஒளிபரப்பப்பட்டதால், அதுகுறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இரவு முழுவதும் மிரட்டல் அழைப்புகள் வந்தன: அனில் அந்தோணி பேட்டி

ஆனால், பிபிசி தயாரித்துள்ள பிரதமர் மோடி குறித்த “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், மத்திய அரசின் தடையை மீது இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆகியோர் பல்வேறு மாநிலங்களில் திரையிட்டு வருகிறார்கள்.

ஹைதராபாத் பல்கலைக்கழத்தில் குடியரசு தினமான நேற்று இந்திய மாணவர் கூட்டமைப்பான எஸ்எப்ஐ, மோடி ஆவணப்பத்தை திரையிட்டது. ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து இந்த ஆவணப்படத்தின் இரு தொகுப்புகளையும் பார்த்தனர். இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் வெளயியிட்டனர். 

மாணவர்களின் சகோதரத்துவ இயக்கம் மோடி குறித்த ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்கு பதிலடியாக, ஆர்எஸ்எஸ் சார்பான ஏபிவிபி அமைப்பு தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று திரையிட்டனர்.

ஏகே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி காங்கிரஸ் பொறுப்புகளில் இருந்து விலகல்

காஷ்மீரில் இந்துக்கள் எவ்வாறு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்பதை விளக்கும் படமான தி காஷ்மீர் பைலஸ் படத்தை திரையிட்டனர். 

ஹைதராபாத் பல்கலைக்கழக பதிவாளர் தேவேஷ் நிகம் கூறுகையில் “ சட்டம் ஒழுங்கு பிரச்சினை,அமைதியை நிலைநாட்டுதல், அடுத்துவரும் தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இனிவரும் நாட்களில் மாணவர்கள் எந்தவிதமான திரைப்படத்தையும் பல்கலைக்கழக வளாகத்தில் திரையிடக்கூடாது” என உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், மாணவர்கள் அமைப்பினரோ தாங்கள் திட்டமிட்டபடி திரைப்படம் ஒளிபரப்பும் நிகழ்ச்சி நடக்கும். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லைஎனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே திரைப்படத்தை திரையிடும் கருவிகளை பல்கலைக்கழக வளாகத்துக்குள் கொண்டு செல்ல காவலர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் எனக் கூறி, ஏபிவிபி அமைப்பினர் நேற்று பல்கலைக்கழகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம், எஸ்எப்ஐ மற்றும் சகோதரத்துவ இயக்கத்துக்கு மட்டும் ஆவணப்படத்தை திரையிடும் கருவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்தது எவ்வாறு என ஏபிவிபி அமைப்பினர் கேள்வி எழுப்பினர்.

கோத்ரா கலவரத்தில் 17 பேர் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை செய்தது குஜராத் நீதிமன்றம்

பல்கலைக்கழக்தில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட ஏபிவிபி அமைப்பினர் முயன்றபோது, பல்கலைக்கழக ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது ஏபிவிபி அமைப்பினருக்கும்,  ஊழியர்களுக்கும் இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
 

click me!