கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடவுள் வெங்கடேஸ்வராவின் மனைவி என்று கூறி உள்ளே வந்த பெண்ணை முடியைப் பிடித்து தரதரவென இழுத்துச்சென்று கோயிலுக்கு வெளியே தள்ளிய கொடுமை நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடவுள் வெங்கடேஸ்வராவின் மனைவி என்று கூறி உள்ளே வந்த பெண்ணை முடியைப் பிடித்து தரதரவென இழுத்துச்சென்று கோயிலுக்கு வெளியே தள்ளிய கொடுமை நடந்துள்ளது.
இந்த காட்சிகள் அனைத்தும், கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன, இதை என்டிடிவி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 21ம் தேதி நடந்துள்ளது. அம்ருதஹல்லி போலீஸ் நிலையத்தில் இரு பெண்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது.
கோயிலுக்குள் வந்த அந்த பெண் கடவுள் வெங்கடேஷ்வரரின் மனைவி என்று கூறிக்கொண்டு, கடவுள் சிலைக்கு அருகே அமர்வதற்கு முயன்றுள்ளார். அப்போது கோயில் அர்ச்சகர்கள், நிர்வாகிகளுக்கும், அந்த பெண்ணும் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்தவீடியோவில் அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து ஒருவர் தரதரவென தரையில் இழுத்து வரும் காட்சிகளும், அந்தப் பெண் அதைத் தடுக்க முயன்றார். ஆனாலும் அந்த நபர் அந்தப் பெண்ணின் கையைத் தட்டிவிட்டு, தரையில் இழுத்துவந்து கோயிலுக்கு வெளியே தள்ளிவிடும் காட்சிகள் உள்ளன.
On Camera, Woman Dragged By Hair, Thrown Out Of Temple In Bengaluru https://t.co/HsVLrpShsE pic.twitter.com/RoUzLNVU6f
— NDTV News feed (@ndtvfeed)அந்தப் பெண் அந்தநபரைத் தடுக்க முயன்றபோது, அந்தப் பெண்ணை அந்தநபர் அடித்து, ஏதோ ஒருபொருளால் அந்த பெண்ணைத் தாக்கும் காட்சியும் உள்ளது. ஆனால், அந்தப் பெண்ணை மற்றொருபெண் தடுக்க முயன்ற காட்சியும் பதிவாகியுள்ளது.
போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த ஊழியர்.. வேலையில் இருந்து அதிரடி நீக்கம் !
இரு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், கோயில் கருவறைக்குள் நுழைய முயன்ற அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவர் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் மனிதநேயற்று ஒரு பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்துவந்து, கோயிலுக்கு வெளியே தள்ளியது குறித்து போலீஸார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.