
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புரளியால், மக்கள் பீதி அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புகார்
ஐதராபாத்தில் உள்ள சரூர்நகர் பகுதியில் உள்ள ஒரு பிரியாணிக் கடையில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்துவதை ஒரு வாடிக்கையாளர் ஒருவர்நேற்றுமுன்தினம் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மீர்பேட்டை பகுதியில்ஒரு வாடிக்கையாளர் ஒருவர் , பலசரக்கு கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதைக் பார்த்து போலிசிடம் புகார் அளித்தார்.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து, நேற்று முன் தினம் மீர்பேட்டை பகுதியில் பல பலசரக்கு கடைகளில்சிவில் சப்ளை துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தி, பலவகையான அரிசியின் மாதிரிகளை எடுத்துச் சென்றனர். மேலும், இது தொடர்பாக பேஸ்புக்கிலும்,வாட்ஸ்அப்பிலும் பலதகவல்கள் பரவியதால், ஆந்திரா மாநிலம் முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது.
உடல்நலக்குறைவு
மீர்பேட்டை போலீசார் கூறுகையில், “ நந்தவனம் காலணியைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் எங்களிடம் புகார் அளித்தார். அதில், சில குறிப்பிட்ட கடைகளில் வாங்கிய அரிசியை சமைத்து சாப்பிட்டதில் இருந்து குடும்பத்தாருக்கு வயிற்று வலி, கை, கால் வலி, கால்வலி ஏற்பட்டு பல உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவரின் மனைவி சமைத்த உணவை சாப்பிட்ட போது அது சாப்பிட முடியாமல், அரிசி வேகாமல் இருந்துள்ளது’’ என்றார்.
மக்கள் பீதி
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள பல மளிகைக்கடைகளில் பிளாஸ்டிக்அரிசி கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக வாட்ஸ் அப், பேஸ்புக்கில்வதந்தி பரவியதால் மக்களிடையே பதற்றமான சூழல் நிலவியது.
சோதனை நடத்த உத்தரவு
இதற்கிடையே ஆந்திரா மாநில உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரி னிவாச ராவிடம் இது குறித்து கேட்டபோது, “ பிளாஸ்டிக் அரிசி பல கடைகளில் கலப்படம் செய்து விற்பதாக புகார்கள் வந்துள்ளன. ஆனால், இதுவரை பிளாஸ்டிக்அரிசி குறித்து எந்த ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை. இது புகார்கள் குறித்து சோதனையிடக் கூறி அதிகாரிகளிடமிருந்து உத்தரவுகள் வரவில்லை. இருப்பினும் உள்ளூரில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.
பாக்ஸ் மேட்டர்.....
‘பிளாஸ்டிக் அரிசி’யில் கிரிக்கெட் விளையாட்டு
உத்ராகண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் பிளாஸ்டிக்அரிசி வெளிப்படையாகவே விற்கப்படுகிறது.
ஹல்த்வானி சந்தையில் வாங்கப்பட்ட அரிசியை ஒரு குடும்பத்தினர் வாங்கி வந்து சமைத்த போது அதன் சுவை வேறுபட்டு இருப்பதை அறிந்தனர். இந்த தகவல்,பிளாஸ்டிக் அரிசியால் செய்த சாதத்தை உருட்டி அதைக் கொண்டு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் விடியோ சமூக தளங்களில் பரவியது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஹல்த்வான் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆய்வு நடத்தினர். மேலும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்தனர்.