ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிப்பு...? – பிரணாப்க்கு சென்ட் ஆப் கொடுக்க தயாராகும் தேர்தல் ஆணையம்...

First Published Jun 7, 2017, 1:15 PM IST
Highlights
The date for the presidential election announced today evening - ready to sendoff pranab


குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைவதை தொடர்ந்து குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து யாரை வேட்பாளராக அமைக்கலாம் என காங்கிரஸ் தரப்பில் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.

மேலும் பாஜக தரப்பில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவரும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவரும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநருமான திரவுபதி மர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 வாக்குகள் தேவை. இந்நிலையில் குடியரசு தேர்தலுக்கான தேதி இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!