
அதிசயங்கள் எந்த நேரத்திலும் எங்குவேண்டுமென்றாலும் நடக்கும். பல அதிசயங்கள் நிகழ்ந்து வந்தாலும், ஒரு சில அதிசயங்கள் நம் மனதில் ஒரு விதமான வியப்பை கொடுக்கும்.
அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாடு ஒன்று மனித முக அமைப்பை கொண்ட கன்றை ஈன்றது. இந்த கன்று குட்டிக்கு மனிதர்களுக்கு இருப்பது போலவே கண் காது மூக்கு என அனைத்து உறுப்புகளையும் கொண்டுள்ளது
மாடுகளை தெய்வமாக வழிப்படுவது இந்துக்களின் இயல்பு. இந்நிலையில் கோமாதா ஒன்று இது போன்ற வித்தியாசமான கன்றை ஈன்றதால், அதனை விஷ்ணுவின் அவதாரமாக பார்க்க வேண்டும் என வயதில் மூத்தவர்கள் சொல்லவே , அந்த கன்றினை கோவிலில் வைத்து வளர்க்க முடிவு செய்தனர் .
ஆனால், பிறந்த ஒரு சில மணி நேரத்திலேயே அந்த கன்றுக் குட்டி இறந்ததால், அதனை கண்ணாடி பெட்டியில் வைத்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.
விஷ்ணுவின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த கன்றுக்குட்டியை பார்த்து வணங்க ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் முறைப்படி சடங்கு செய்து, அதே இடத்திலேயே இந்த கன்றுகுட்டிக்கு கோவில் கட்ட அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்