
இந்த ஆண்டு பருவமழை மிகச்சிறப்பாக,நீண்ட கால சராசரி அடிப்படையில் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் திருத்தப்பட்ட அறிக்கையை நேற்றுவௌியிட்டுள்ளது.
பருவமழை சராசரியாக இருக்கும் என்று முன்பு கூறப்பட்ட நிலையில், எல்-நினோதாக்கம் குறைந்து வருவதால் பருவமழை மனநிறைவு அளிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய கணிப்பு
இது குறித்து இந்திய வானிலை மையத்தின் தலைவர் கே.ஜே.ரமேஷ் நேற்று டெல்லியில் கூறுகையில், “ பருவமழை தொடக்கத்தில் நாங்கள் கணித்தபோது, சராசரி மழைக்கே இந்த ஆண்டு வாய்ப்பு இருந்தது என்று கூறினோம்.
மாற்றம்
பிப்ரவரி மாதம் நாங்கள் கணித்தபடி எல்-நினோவுக்கு வாய்ப்பு இருந்தது. இதனால், தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக முன்பு கணிக்கப்பட்டது. ஆனால், பசிபிக் பெருங்கடலில் உருவாகி இருந்த எல்-நினோகாலநிலையில் இப்போது மாற்றம் ஏற்பட்டு வெப்பம் குறையத் தொடங்கி இருக்கிறது.
நல்ல மழை
இதனால், எல-நினோ தாக்கம் குறைந்து, நம் நாட்டுக்கு இந்த ஆண்டு நீண்ட கால சராசரி மழை பெய்ய 98 சதவீதம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமீபத்திய கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆகஸ்ட்மாதம் வடகிழக்கு பருவமழை நீண்ட கால சராசரி மழையாக 99 சதவீதம் பொழிய வாய்ப்புள்ளது.
மனதிருப்தி
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்தது போல முன்கூட்டியே தொடங்கி கேரளாவில் பெய்து வருவது சிறப்பாகும். இது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது’’ எனத் தெரிவித்தார்.