மிட்ரல் வால்வில் ஏற்படும் மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. இதன் விளைவாக இதயத்தின் இடது மேல் அறைக்குள் மீண்டும் இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. இந்த நோய் தீவிரமடைந்தால் இதய செயலிழப்பு ஏற்படும்.
சிக்கலான இதய நிலை கொண்ட ஒரு நாய்க்கு டெல்லியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் நாய்க்கு மேற்கொள்ளப்பட்ட முதல் அறுவை சிகிச்சை என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
7 வயதான பீகிள் ரக நாயான ஜூலியட் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதய மிட்ரல் வால்வு நோயால் பாதிக்கப்பட்டு வந்தது என கிழக்கு கைலாஷில் உள்ள மேக்ஸ் பெட்இசட் மருத்துவமனையின் சிறிய விலங்குகளுக்கான இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பானு தேவ் சர்மா தெரிவித்தார்.
undefined
மிட்ரல் வால்வில் ஏற்படும் மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. இதன் விளைவாக இதயத்தின் இடது மேல் அறைக்குள் மீண்டும் இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. இந்த நோய் தீவிரமடைந்தால் இதய செயலிழப்பு ஏற்படும்.
அறுவைசிகிச்சை நிபுணர்கள் மே 30ஆம் தேதி டிரான்ஸ்கேட்டர் எட்ஜ்-டு-எட்ஜ் ரிப்பேர் (TEER) செயல்முறையில் இதய அறுவை சிகிச்சை செய்தனர்.
வீட்டில் 24 மணிநேரமும் ஏசி ஓடுதா? உங்களுக்கு வல்லுநர்கள் கொடுக்கும் அட்வைஸ் இதுதான்!
"மைக்ரோ அறுவை சிகிச்சையும் வழக்கமான அறுவை சிகிச்சையும் இணைந்த செயல்முறையை பின்பற்றுவதால் இது ஒரு ஹைப்ரிட் அறுவை சிகிச்சை. இந்த செயல்முறையின் சிறந்த அம்சம், இது மிகக் குறைவான அபாயம் கொண்டது என்பதுதான்” எனவும் டாக்டர் சர்மா விளக்கியுள்ளார். ஜூலியட்டின் உரிமையாளர்கள் கடந்த ஒரு வருடமாக அதற்கு இதய பிரச்சினைக்கான மருந்துகளை அளித்து வந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலராடோ மாகாண பல்கலைக்கழகத்தில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா சென்றிருந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை முறை பற்றி அறிந்துகொண்டு, அந்த வழியில் ஜூலியட்டுக்கு ஆபரேஷன் செய்துள்ளனர்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து ஜூலியட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.
மிட்ரல் வால்வு நோய் என்பது இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் நாய்களுக்கு மிக அதிகமாக ஏற்படும் இதய நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்படும் நாய்களுக்கு மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அரசு ஊழியர் லஞ்சம் வாங்கினால் மனைவிக்கும் தண்டணை! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!