பட்டாசுகளை வாங்கினாலோ, வெடித்தாலோ 6 மாதம் சிறை... டெல்லி அரசு அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Oct 19, 2022, 5:44 PM IST
Highlights

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ அல்லது வெடித்தாலோ சிறை தண்டனை விதிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ அல்லது வெடித்தாலோ சிறை தண்டனை விதிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி மக்கள் புத்தாடைகள் எடுத்தல், பட்டாசு வாங்குதல் என பரபரப்பாக இருக்கிறார்கள். இதனிடையே கடும் காற்று மாசால் பாதிக்கப்பட்டிருக்கு டெல்லியில் தீபாவளி கொண்டாடுவது என்பது சற்றே சவாலான விஷயம் தான். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுவை கட்டுப்படுத்திடும் விதமாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க: உ.பி.யில் பதிவான வாக்கு செல்லாது! காங்கிரஸ் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் மூலம் சதி தரூர் புலம்பல்

குறிப்பாக அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால் மற்ற மாநிலங்களை காட்டிலும் காற்று மாசு டெல்லியில் அதிக அளவில் இருக்கும். அதே காலகட்டத்தில் தீபாவளி பண்டிகை வருவதால் பட்டாசு வெடிக்க ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக பட்டாசுகள் விற்கப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு, பட்டாசுகளை பறிமுதல் செய்தும் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதையும் படிங்க: ‘பாத்ரூமில் உங்கள அடைக்கலைணு சந்தோஷப்படுங்க’! சசி தரூரை கிண்டலடித்து கொம்புசீவும் பாஜக

இந்த நிலையில் டெல்லி சுற்றுசூழல் அமைச்சர் கோபால் ராய் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், தனிநபர் ஒருவர் கடையில் பட்டாசு வாங்கினாலோ, வெடித்தாலோ அவருக்கு ரூ.200 அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை. இதை தவிர சட்ட விரோதமாக பட்டாசுகள் குடோன்களில் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ அந்த நபருக்கு ரூ.5,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை. இந்த பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்காணிப்பதற்காக 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!