IIMC முன்னாள் மாணவர் சந்திப்பு.. சிறந்த இந்திய மொழி நிருபருக்கான விருதை வென்ற கேரள பத்திரிகையாளர்..

Published : May 01, 2023, 05:44 PM ISTUpdated : May 01, 2023, 05:56 PM IST
IIMC  முன்னாள் மாணவர் சந்திப்பு..  சிறந்த இந்திய மொழி நிருபருக்கான விருதை வென்ற கேரள பத்திரிகையாளர்..

சுருக்கம்

கேரளாவில் நடைபெற்ற ஐஐஎம்சி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

IIMC முன்னாள் மாணவர் சங்கத்தின் (Indian Institute of Mass Communication) கேரள பிரிவின், வருடாந்திர சந்திப்பு ஏப்ரல் 29 அன்று நடைபெற்றது. Connections 2023 என்ற பெயரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரளாவில் ஊடகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் IIMC முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். ஐஐஎம்சி கேரள பிரிவின் தலைவர் குரியன் ஆபிரகாம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

IIMC கோட்டயத்தில் உள்ள 2017-18 மலையாளப் பத்திரிக்கை துறையின், சந்தியா மணிகண்டனுக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய மொழி நிருபருக்கான (ஒளிபரப்பு) IFFCO IIMCAA விருது வழங்கப்பட்டன. பரிசுக்கோப்பையுடன், ரொக்கப் பரிசு ரூ.50,000 மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்து ஆண்களால் வழக்கமாகப் பின்பற்றப்படும் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டுப் பயிற்சியை முஸ்லீம் பெண் மற்றும் அவரின் உடன்பிறந்தோர் குறித்து சந்தியா அளித்த அறிக்கைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க : இனி விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு காலம் அவசியமில்லை.. உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..

IIMC கோட்டயத்தின் 2017-18 பேட்சை சேர்ந்த பிஜின் சாமுவேல், புதுதில்லியில் நடந்த நிகழ்ச்சியில் தம்பு என்ற அமைப்பு நடத்திய புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்த தனது அறிக்கைக்காக ஆண்டின் சிறந்த இந்திய மொழி நிருபர் விருதைப் பெற்றார். பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக UNICEF உடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனிடையே குரியன் ஆபிரகாம், IIMCAA கேரளா பிரிவு துணைத் தலைவர் கே.எஸ்.ஆர்.மேனன், பொருளாளர் ஹுசைன் கொடின்ஹிஆகியோர் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவங்களை விவரித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் மாணவர்களும் இதுவரை தங்கள் பயணத்தைப் பகிர்ந்து கொண்டனர். IFFCO IIMCAA விருதுகள்  அழைப்பாளர் சுனில் மேனன் மற்றும் IIMCAA ன் நிறுவனர் ரித்தேஷ் வர்மா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

இதையும் படிங்க : மாதம் ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை.. டிகிரி இருந்தால் போதும்.. விவரம் உள்ளே..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?
அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்