இனி சாலையில் எச்சில் துப்பினால் அவரே சுத்தம் செய்யவேண்டும்..! அதிரடி உத்தரவு...!

Published : Nov 12, 2018, 03:50 PM IST
இனி சாலையில் எச்சில் துப்பினால் அவரே சுத்தம் செய்யவேண்டும்..! அதிரடி உத்தரவு...!

சுருக்கம்

சாலையில் எச்சில் துப்பினால், அதனை அவரே சுத்தம் செய்ய வேண்டும் என எப்படி புனே மாநகராட்சி  உத்தரவு பிறப்பித்து வெற்றிகரமாக நல்ல பலனை கிடைக்க செய்து உள்ளதோ, அதே மாதிரி இங்கேயும்  உத்தரவு இல்லாமலேயே மக்கள் நாகரிகமாக நடந்துக்கொண்டால் அருமையாக இருக்கும் என  பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்

புனே மாநகரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக பொது இடத்திலும் சாலையில் செல்லும் போதும் எச்சில் துப்பும் பழக்கம் கொண்டவர்கள், இனி அவ்வாறு துப்பினால் அவர்களே அந்த எச்சிலை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை புனே மாநகராட்சி அமல் படுத்தியது.

அதில் முதற்கட்டமாக, பிப்வேவாடி வார்டில் செயல்படுத்தப்பட்டது. பின்னர் இதற்கு நல்ல வரவேற்பு மற்றும் பலன் கிடைத்ததை அடுத்து, மற்ற 15 வார்டிலும் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் படி, சாலைகள், சுவர்கள், நடைப்பாதை என எந்த இடத்திலாவது எச்சில் துப்பினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்களையே மாநகராட்சி ஊழியர்களிடம் இருந்து துடிப்பதை வாங்கி சுத்தம் செய்ய வலியுறுத்தப்படும்.

இதை அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் மட்டும் சுமார் இருபது பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அபராதம் கட்ட மறுத்தால், அந்த இடத்திலேயே அவர்கள் கையில் துடைப்பம் கொடுத்து சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த முறை மூலம், மக்கள் நல்ல ஒழுக்கத்தை கடைப்பிடிக்க செய்கின்றனர். மேலும் பூனே மாநகரத்தையும்  தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர் என்கின்றனர் அதிகாரிகள். இதே போன்ற திட்டம் தமிழகத்திலும் வந்தால், இங்கேயும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும் என பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தாண்டு வெளியான சுத்தமான நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதல் இடத்திலும், புனே 10-வது இடத்தையும் பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"