இறங்கி அடித்த இந்திய ராணுவம்..! மிரண்டுபோன பாகிஸ்தான்... 200 தீவிரவாதிகள் உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Feb 26, 2019, 10:26 AM IST
Highlights

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 14-ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு  ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை  எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். 

இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ வெடி குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!