
மேற்கு வங்கம் மாநிலத்தைப் பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் கூர்காலாந்த் தனி மாநிலமாக அமைக்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றனது.
மேற்குவங்க மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் வங்கமொழி கட்டாயமாக்கப்படுவதாக முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக கூர்க்கா இன மக்கள் அதிகமாக வாழும் டார்ஜிலிங் பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் காலவரயைற்ற முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றனது. தற்போது இந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநிலத்தைப் பிரிக்க நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, கூர்காலாந்துக்காக நடக்கும் போராட்டம் தீவிரவாதிகளால் ஊக்குவிக்கப்படுகிறது என்று கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தரப்பினர் பத்திரிக்கையாளர்களை கடத்தி பிணை கைதிகளாக வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
போராட்டத்தல் ஈடுபட்டவர்கள் கல் எறிந்து அவர்கள் எதிர்ப்பை காட்டி இருந்தார்கள் என்றால் இதனை வேறு மாதிரி அணுகி இருப்பேன் என்றும் மம்தா தெரிவித்தார்.
ஆனால், அவர்களிடம் பெரும் எண்ணிக்கையில் ஆயுதங்கள் உள்ளன. அவர்கள் கோரிக்கைகள் பற்றி என்னிடத்தில் பொறுமையாக எடுத்துக்கூறி இருந்தால், அதைப் பற்றி கட்டாயம் விவாதித்து இருப்பேன் என்றும் மம்தா கூறியுள்ளார். ஆனால், என்னை ஆயுதத்தை வைத்து மிரட்டினீர்கள் என்றால், அந்த ஆயுதத்தை எப்படி பிடுங்குவது என்று எனக்குத் தெரியும் என்றும் என் உயிரே போனாலும் மேற்கு வங்கத்தை பிரிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.