"பதினோறாவது விரல் வைத்திருப்பவன் தேச துரோகி" : புகையில் கருகும் இந்திய மாண்பு..!!

 
Published : Jun 18, 2017, 02:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
"பதினோறாவது விரல் வைத்திருப்பவன் தேச துரோகி" : புகையில் கருகும் இந்திய மாண்பு..!!

சுருக்கம்

smoking is injurious tho the country

உங்களில் எத்தனை பேருக்கு பதினோறாவது விரல் இருக்கிறது கை உயர்த்துங்கள் பார்ப்போம்!...அப்படி பதினோறாவது விரல் இருக்குமேயானால் உங்கள் பேச்சு கா!

ஆம்! சிகரெட் புகைப்பவர்களை தேச துரோகியாக சித்தரிக்கிறதுது மருத்துவ உலகமும், சூழல் ஆர்வலர்களும். உண்மைதான், மது அருந்துபவனால் அவனது உடல் நலன் மட்டும்தான் நேரடியாக பாதிக்கப்படுகிறது.

ஆனால் புகைப்பவர்கள் ஊதித்தள்ளும் புகையினால் பக்கத்திலிருப்பவர்களும், அந்த சூழல் மண்டலமுமே வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஆக இவர்களை தேச துரோகிகள் என்று சொல்வதில் என்ன தவறு இருந்திவிட முடியும்? 

இந்த நேரத்தில் புரட்சிப்புயல் அண்ணன் வைகோ அவர்கள் சிகரெட் குறித்து அன்று பேசிய பஞ்ச் டயலாக் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. அப்படி என்ன பேசினார் வைகோ?...அவரது மகன் துரைவையாபுரி ஐ.டி.சி. சிகரெட்டுக்கான தென்காசி டவுன் டிஸ்ட்ரிபியூட்டராக இருக்கும் விஷயம் வெளிப்பட்டதும் “புகைபிடிப்பதனால் ஒருவன் கற்பழிக்க போவது கிடையாது, புகைபிடிப்பதனால் ஒருவன் தான் பெற்ற மகளையே பெண்டாளப்போவது கிடையாது...புகைபிடிப்பதனால் ஒருவன் சமுதாயத்தை  கெடுத்தது கிடையாது.” என்று போட்டாரே ஒரு போடு.

சரி அது கிடக்கட்டும் அரசியல்! நாம் விஷயத்துக்கு வருவோம்...உலக நாடுகளை விட இந்தியாவில் சிகரெட் பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகதின் முன்னாள் செயலர், கேஷவ் தேசிராஜூ கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில், புற்றுநோயை வென்றெடுத்தவர்களுக்கான சந்திப்பு  கடந்த சனியன்று நடந்தது. இதில் விருந்தினர்களாக புற்றுநோய் மைய தலைவர் சாந்தா, கேஷவ் தேசிராஜூ போன்றோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராஜூ “சிகரெட் போன்ற புகையிலை பொருட்களின் பயன்பாடு, உலக அளவில் குறைந்து வந்தாலும், இந்தியாவில் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இது சர்வதேச அளவில் இந்தியாவின் மாண்பை குறைக்கிறது. புகைப்பவரை தடுக்க குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.” என்று நெகிழ்வாக ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். 

கேஷவ் தேசிராஜூ கூறுவதில் தவறோ, மிகைப்படுத்தலோ கொஞ்சமும் இல்லை. இந்தியாவை விட்டுத் தள்ளுங்கள் நம் தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்...ஊதி தள்ளுகிறார்கள். சென்னை, கோவை, திருச்சி என்று சிட்டிகள் உட்பட பட்டிதொட்டிகளையும் சேர்த்தே சொல்லலாம் ஊதி ஊதியே சாகிறது பெரும் மக்கள் தொகை. 

எந்த டீக்கடையினுள்ளும் நுழைந்து நிம்மதியாக ஒரு வாய் டீ குடிக்க முடியவில்லை, எந்த தியேட்டரின் ரெஸ்ட்ரூமுக்குள்ளும் நிம்மதியாய் சென்று வர முடியவில்லை. புகை, புகை, புகையென்று புகைத்துத் தள்ளுகிறது பெருங்கூட்டம். பள்ளிப்பருவத்திலேயே சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகும் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது.

நாற்பது வயதுக்குள் நுரையில் நாறி இறந்து போகிறது. எதிர்காலத்தின் கைகொடுப்பான் என்று இவர்களை நம்பி காத்திருக்கும் சீனியர் சிட்டிசன்களின் பிழைப்பு அதோகதிதான், அநாதை கதிதான். 

சோஷியல் ட்ரிங்கராக இருப்பது கூட பெரிய தவறில்லை. எப்போதாவது குடிப்பவர்களை கூட அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் ஆனால் புகைப்பவனை சகித்துக் கொள்ளவே முடியாது என்று நடு மண்டையில் சுடுகிறது மருத்துவ உலகம்.

சிகரெட்டில் இருக்கும் நிகோடின் அதை உள்ளிளுப்பவனின் மரபணுவையே (ஜீன்) மாற்றிவிடும் என்கிறார்கள்.
ம்ம்ம்!...இந்த கட்டுரையை வாசித்துவிட்டு சிகரெட்டை வீசி எறியும் உங்களுக்கு நியூஸ் ஃபாஸ்ட் இணைய தளம் சார்பாக ஒரு பூங்கொத்து!

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!