"நான் கடவுளாக இருந்ததால் கொலை செய்தேன்"... நீதிபதியை திகைக்க வைத்த ஆயுள் கைதி...

 
Published : Oct 23, 2016, 06:48 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
"நான் கடவுளாக இருந்ததால் கொலை செய்தேன்"... நீதிபதியை திகைக்க வைத்த ஆயுள் கைதி...

சுருக்கம்

நான் துர்க்கையாக இருந்தபோதுதான் என் குடும்பத்தினரைக் கொன்றேன். அதனால் என்னை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், சிதி மாவட்டத் சேர்ந்தவர் ராஜ்வா கோல் (30). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இந்துள்ளனர். இவர் 2012 ஆம் ஆண்டில் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதைடுத்து ராஜவா கோலுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன் கணவன் மற்றும் குழந்தைகளை அந்த பெண் கொலை செய்துள்ளார். அது மட்டுமல்லாமல், வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர், எதிரே வந்தவர்களையும் தாக்கியுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர் கிராமத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து, அந்த பெண் மேல்முறையீடு செய்துள்ளார். இதில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டைனையாக குறைத்து உத்தரவிடப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, அந்த பெண், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அந்த பெண், என் குடும்பத்தினரை கொலை செய்ய வேண்டும் என்ற எந்த நோக்கமும், எனக்கு இல்லை. தேவி துர்க்கையின் சக்தி, என்னை ஆட்கொண்டபோதுதான், அவர்களை கொலை செய்தேன். ஏனெனில், அப்போது நடந்தது எனக்கு எதுவும் தெரியாது. அதனால் என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்