
ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 6:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது கட்டிடத்திலிருந்து கரும்புகை எழுந்தது.
தீயை அணைக்க பதினொரு தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் இன்னும் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் மோடி, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார். ஒவ்வொரு இறந்தவருக்கும் ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.