சாலையில் வைத்து இஸ்லாமிய பெண்ணை தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்..!

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 12:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
சாலையில் வைத்து இஸ்லாமிய பெண்ணை தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்..!

சுருக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இஸ்லாமிய பெண் ஒருவரை அவரது கணவர் சாலையில் வைத்து தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலாக் கூறி பெண்களை விவகாரத்து செய்யும் விவகாரம் தற்போது நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இர்பான் என்பவருக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை என கூறப்படுகிறது. தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் சாலையில் திடீரென தனது மனைவியை சந்தித்து மூன்று முறை தலாக் கூறி இர்பான் விவாகரத்து செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. இர்பானின் இந்த செயலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

45, 25 நாட்கள்.. LPG சிலிண்டர் முன்பதிவில் மெகா சேஞ்ச்..? மே 1 முதல் புதிய விதி அமல்..
Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்