ஃபர்ஸ்ட் நைட்லேயே இந்த கொடுமையா! மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர் கைது!

First Published Dec 6, 2017, 3:22 PM IST
Highlights
Husband arrested for assaulting wife


ஆண்மைக் குறைபாட்டை மறைத்து திருமணமும் செய்து கொண்டு, தன்னுடைய குறைபாட்டை வெளியில் சொன்னதால் புது மணப்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கங்காதர நெல்லூர் மண்டலம், மோதரங்கனபள்ளி பகுதியைச்சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் ராஜேஷ் (24) இவர், அரசு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சின்னதாமரை குண்டா பகுதியைச் சேர்ந்த பாபு ன்பவரின் மகள் சைலஜா (20) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை அடுத்து, மணமகள் வீட்டில், முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அறைக்குள்  மணமக்கள் சென்றனர். அப்போது, ராஜேஷ், மனைவி சைலஜாவிடம், தனக்கு ஆண்மை குறைவு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதனை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் ராஜேஷ் கூறியுள்ளார். இதனைக் கேட்ட சைலஜா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து சைலஜா, தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட சைலஜாவின் பெற்றோரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைக் கேட்ட ராஜேஷ், மனைவி சைலஜாவை முதலிரவு அறைக்கு அழைத்து வந்து, அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.  ஏன் இந்த விஷயத்தை வெளியில் கூறினாய் என்று கேட்டு, சைலஜாவை கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.. சைலஜாவின் அலறலைக் கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கதவை தட்டியுள்ளனர். ஆனாலும், கதவை திறக்காமல் ராஜேஷ்,
சைலஜாவை ரத்தம் கொட்டும் அளவுக்கு கடுமையாக தாக்கியுள்ளார்.

நீண்ட நேரம் கதவை தட்டிய பிறகும் திறக்காததால், மணமகளின் உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். உடலில் காயங்களுடன் சைலஜா மயக்கி கிடந்துள்ளார். பின்னர், சைலஜா, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, மணமகன் ராஜேஷ் மீது, சைலாஜாவின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் ராஜேசையும், அவரது பெற்றோரையும் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், தனக்கு ஆண்மை குறைபாடு இருப்பது திருமணத்துக்கு முன்பே தெரியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, ராஜேசையும், அவரது தந்தை குமாரசாமியையும் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ராஜேசை இடைநீக்கம்
செய்து மாநில கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

click me!