
பெண் ஒருவரை காருக்குள் அடைத்து, ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் கூறியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், இன்று காலை, ஓலா வாகனத்தை புக் செய்து பயணம் செய்தார். அப்போது, கார் ஓட்டுநர், அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்துள்ளார்.
காரின் கதவுகள் லாக் செய்யப்பட்டிருந்தது. கார் கதவை திறக்க முடியாததால், அந்த பெண் காருக்குள்ளே சிக்கிக் கொண்டுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த ஓட்டுநர், பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண், ஓலா கார் ஓட்டுநர் மீது போலீசில் புகார் கூறியுள்ளார். இந்த புகாரை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.