ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தில் பங்கேற்க ஆன்லைனில் இ-சான்றிழைப் பெற்றிடுங்கள். உங்கள் மூவர்ண கொடியை போட்டோ எடுத்து எவ்வாறு பதிவேற்றுவது மற்றும் உங்கள் சான்றிதழைப் பெறுவது எப்படி என்பதை இப்பதிவில் காணலாம்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடியின் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. தற்போது மூன்றாம் கட்ட பிரச்சாரம் தொடங்கியுள்ளது. மூவர்ணக் கொடியை உங்கள் வீட்டில் ஏற்றியிருந்தால், நீங்களும் பிரச்சாரத்தில் பங்கேற்கலாம். நீங்களும் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால், உங்களது வீட்டில் ஏற்றப்பட்டுள்ள கொடியை படம் பிடித்து அரசு போர்டலில் பதிவேற்றி ஒரு இ-சான்றிதழைப் பதிவிறக்க வேண்டும். அதன் செயல்முறையை என்ன என்பதை இங்கு காணலாம்.
இ-சான்றிதழைப் பெறுவது எப்படி?
ஆகஸ்ட் 15, 2024-ல் கொண்டாடப்படுவது 77வதா? அல்லது 78வது சுதந்திர தினமா?
ஹர் கர் திரங்கா பிரச்சாரம் 2022ம் ஆண்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழ் தொடங்கப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரசாரத்தில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், மக்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் தங்கள் புரொபைல் படத்தில் மூவர்ணக் கொடியை வைக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். ஊடக அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டில் 23 கோடி பேரும், 2023 ஆம் ஆண்டில் சுமார் 10 கோடி பேரும் மூவர்ணக் கொடியுடன் செல்ஃபிகளைப் பதிவேற்றியுள்ளனர்.