பாஜக 370 இடங்களை தாண்டுமா? நிழல் பந்தைய சந்தையில் புக்கிகள் எதிர்பார்ப்பு என்ன?

By Manikanda Prabu  |  First Published Jun 2, 2024, 11:46 AM IST

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் உள்ள நிலையில், நிழல் பந்தைய சந்தையில் புக்கிகள் எதிர்பார்ப்பு என்னவாக உள்ளது


டெல்லியில் உள்ள நிழல் பந்தைய சந்தை புக்கிகள் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்று கிடைக்கும் என கணித்துள்ளனர். ஆனால், ஆளும் கட்சி நிர்ணயித்த 370 இடங்களை விட மிகவும் குறைவான இலக்கையே அவர்களை நிர்ணயித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. மத்தியில் ஒரு கட்சி அல்லது கூட்டணியுடன் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், பாஜக மட்டும் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று நிழல் பந்தைய சந்தையில் புக்கிகள் கணித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

நேற்று வெளியான கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. ஆளும் பாஜக கூட்டணி 365 இடங்களில் வெற்றி பெறும் என மொத்தம் 12 கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. இருப்பினும், இத்தகைய கணிப்புகள் எப்போதும் துல்லியமாக இருப்பதில்லை.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மட்டும் 303 முதல் 306 இடங்கள் கிடைக்கும் என புக்கிகள் கணிக்கின்றனர். அதாவது 303 முதல் 306 என்ற விகிதத்தில் பந்தயம் கட்டியுள்ளனர். 303 இடங்களுக்கு பந்தயம் கட்டுபவர்கள், அதனை விட குறைவான இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் லாபம் ஈட்டுவார்கள். 306 தொகுதிகளில் பந்தயம் கட்டுபவர்கள் அதைவிட அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால் லாபம் ஈட்டுவார்கள்.

தியானத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சுறுசுறுப்பான பிரதமர் மோடி: இன்று மட்டும் 7 கூட்டங்கள்!

இந்தியாவில் தேர்தல் முடிவுகளில் பந்தயம் கட்டுவது சட்டவிரோதமானது, ஆனால் நிழல் சூதாட்ட தளங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக அதிகளவில் வெற்றி பெறும் எனவும், தமிழ்நாட்டில் தனது தடத்தை பதிக்கும் எனவும் புக்கிகள் கணித்துள்ளனர்.

குஜராத்தில் 25-26, உத்தரப் பிரதேசத்தில் 64-66, மத்தியப் பிரதேசத்தில் 27-29, ராஜஸ்தானில் 19-21, சத்தீஸ்கரில் 10-11, பீகாரில் 13-15, , ஜார்கண்டில் 10-11, ஹரியானா 5-6, இமாச்சல்பிரதேசத்தில் 4, உத்தரகாண்டில் 5 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என புக்கிகள் எதிர்பார்க்கிறார்கள். டெல்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என புக்கிகள் கணித்துள்ளனர். தமிழ்நாட்டில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனது கால் தடத்தை பதிக்கும் எனவும் புக்கிகள் கணித்துள்ளனர். பாஜகவின் தெற்குக்கான இலக்கு கைகொடுக்கும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர்.

நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருக்கும் ஒடிசாவில் மொத்தமுள்ள 21 இடங்களில் பாஜக 14-15 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பஞ்சாபில் உள்ள் 13 தொகுதிகளில் இரண்டு இடங்களிலும், தெலங்கானாவில் 7-8 இடங்களிலும் பாஜக வெற்று பெறும் என புக்கிகள் எதிர்பார்க்கின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் 19-21 இடங்களையும், மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளில் 18-20 இடங்களையும் பாஜக கைப்பற்றும் எனவு புக்கிகள் கணித்துள்ளனர்.

click me!