இன்னும் நிரப்பலையா! ஐஏஎஸ், ஐபிஎஸ், சிபிஐ அதிகாரிகள் பணியில் காலியிடங்கள் நிலவரம் தெரியுமா?

By Pothy Raj  |  First Published Dec 15, 2022, 4:47 PM IST

இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ், சிபிஐ அதிகாரிகள் பணியிடங்களில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பது குறித்து மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ், சிபிஐ அதிகாரிகள் பணியிடங்களில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பது குறித்து மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

மத்திய பணியாளர் துறையின் இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது: 

Tap to resize

Latest Videos

36-வது ரஃபேல் போர் விமானம் பிரான்ஸிலிருந்து இந்தியா வந்தடைந்தது

ஐஏஎஸ் பிரிவில் 6,789 அதிகாரிகளும், ஐபிஎஸ் பிரிவில் 4,984 பதவிகளும், ஐஎப்எஸ் பிரிவில் 3,191 பணியிடங்களும் 2022,ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி ஒதுக்கப்பட்டன. 

ஆனால், தற்போது ஐஏஎஸ் பிரிவில் 5,317 அதிகாரிகளும், ஐபிஎஸ் பிரிவில் 2,134 அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் உள்ளனர். ஐஎப்எஸ் பிரிவில் 2,134 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு களத்தில் உள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பிரிவில் பணியிடங்கள் காலியாவதும், அதை நிரப்புவதும் தொடர்ச்சியான வழிமுறை. யுபிஎஸ்சிஇதற்கான முறையான தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களை இந்தப்பணிக்கு பரிந்துரைக்கிறது. 2021ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு கூடுதலாக 180ஐஏஎஸ் அதிகாரிகளை பணிக்கு எடுக்கவும், ஐபிஎஸ் பிரிவில் 200 அதிகாரிகளை பணிக்கு எடுக்கவும் அரசு அறிவித்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுங்கள்:பாஜக எம்.பி. சுஷில் மோடி கூற காரணம் என்ன?

சிபிஐ அதிகாரிகளைப் பொறுத்தவரை 7,295 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் கூடுதலாக 128 பதவிகள் உருவாக்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகள், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மற்றும் சிபிஐயில் பிரதிநிதியாக உள்ள இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு பரிந்துரை செய்யுமாறு சிபிஐ கேட்டுக்கொள்கிறது

இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்

click me!