சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கும் முயற்சியைத் தொடங்கிய கடைசி 20 நிமிடங்களில் எடுக்கப்பட்ட நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும் கடைசி 20 நிமிட காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டர் நிலவில் சுமுகமாக தரையிறங்கியதும், இந்தியா விண்வெளி வரலாற்றில் புதிய சரித்திரத்தைப் படைத்தது. நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடாக இந்தியா பெயர் பெற்றுவிட்டது.
இரவு பகல் பாராமல் உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் நம்பிக்கைகளைத் சுமந்துகொண்டு, சென்ற விக்ரம் லேண்டர் அந்த 20 நிமிடங்களின்போது நிலவின் மேற்பரப்புக்கு நெருக்கமாகச் சென்று பார்த்த காட்சியை இஸ்ரோ இப்போது அனைவரின் பார்வைக்கும் அளித்துள்ளது.
undefined
சந்திராயன்-3 பயணத்தின் காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டுவரும் இஸ்ரோ இந்த வீடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. "லாண்டர் இமேஜர் கேமரா, நிலவைத் தொடுவதற்கு சற்று முன்பு நிலவைப்படம்பிடித்தது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்" என இஸ்ரோ கூறியுள்ளது.
லேண்டரின் உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜர் கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோ, நிலவின் அழகிய மேற்பரப்பைக் காட்டுகிறது.
சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுள் 14 நாள்தானா? அதற்குப் பின் செயல்பட வாய்ப்பு இல்லையா?
Here is how the Lander Imager Camera captured the moon's image just prior to touchdown. pic.twitter.com/PseUAxAB6G
— ISRO (@isro)ஏறக்குறைய இரண்டு நிமிடம் இருக்கும் இந்த வீடியோவில் கடைசி சில வினாடிகள், விக்ரம் லேண்டர் கணிசமாக வேகத்தைக் குறைத்து மெதுவாகச் செல்வதையும், பின்னர் சந்திர மேற்பரப்பில் தரையிறங்குவதையும் காணலாம்.
நேற்று (புதன்கிழமை), சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா ஆனது - விஞ்ஞானிகள் உறைந்த நீரின் முக்கிய இருப்புக்களை வைத்திருக்க முடியும் மற்றும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட தேசத்திற்கான தொழில்நுட்ப வெற்றி என்று விஞ்ஞானிகள் நம்பும் ஒரு வரலாற்றுப் பயணம்.
சந்திரயான்-3 லேண்டர் தொகுதி புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் இந்தியா சரித்திரம் படைத்தது. இந்த வரலாற்று சாதனையை அடைந்த முதல் நாடு இந்தியா என்பது பெருமை கொள்ளத்தக்கது.
இன்று (வியாழக்கிழமை) காலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரை இறங்கியதாக இஸ்ரோ அறிவித்தது. மாலையில் ரோவர் நிலவில் நகரத் தொடங்கி தனது செயல்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறது.