பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பெண்

By SG Balan  |  First Published Feb 19, 2023, 5:14 PM IST

பிரவசம் முடிந்த  3 மணிநேரத்தில் தேர்வு எழுதிய பீகாரைச் சேர்ந்த தலித் பெண் அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறார்.


பீகாரில் ஒரு பெண் பிரசவம் முடிந்த சில மணிநேரங்களில் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ருக்மிணி குமாரி. அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துவைக்கப்பட்டது. பள்ளிப்படிப்பை முடிக்காமலே திருமணம் செய்துவைத்துவிட்டதால், தானும் படித்து நல்ல வேலைக்குச் செல்லவேண்டும் என்று விரும்பியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதனால் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்தார். கருவுற்றிருந்த நிலையிலும் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதத் தயாராகிவந்தார். அதன்படி இந்த ஆண்டு அவர் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதுகிறார். செவ்வாய்க்கிழமை அறிவியல் எழுதவேண்டிய நிலையில், திங்கட்கிழமை இரவே லேசான பிரசவ வலி இருந்துள்ளது. மறுநாள் அதிகாலை 6 மணி அளவில் பிரசவ வலி மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் ருக்மணி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

From the India Gate: இலவச ஆன்மிக யாத்திரையும் சிறுதானிய கிச்சடியும்

எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து கிடையாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

மருத்துவமனையில் வைத்து அவருக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ருக்மிணி கட்டாயம் தேர்வு எழுதியே ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார். இதனால், பிரவசம் முடிந்த  3 மணிநேரத்தில் அவர் தான் விரும்பியடி அறிவியல் தேர்வை எழுதிவிட்டார்.

"பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ருக்மிணி தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண். அவர் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாக இருப்பார்" என்று மாவட்ட கல்வி அதிகாரி பவன் குமார் கூறினார்.

குழந்தை பிறந்த கையோடி தேர்வு எழுதி முடித்தபின் ருக்மிணியிடம்  பேசியபோது, "என் மகனையும் நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. நான் தேர்வு எழுதாமல் போயிருந்தால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிட்டிருக்கும்" எனக் கூறியுள்ளார்.

மகா சிவராத்திரி - சோம்நாத் கோவிலுக்கு ரூ.1.51 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி

click me!