
பசுக்களை கொலைசெய்த நபர்களை கொலை செய்பவர்களுக்கு , ராஜஸ்தான் அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று சட்டீஸ்கர் மாநில சமஸ்கிருத வாரியத்தின் தலைவர் சுவாமி பரமாத்மானந்த் பேசியசு சர்ச்சையை உண்டாக்கி, சமூக ஊடகங்களில் வேகமாகபரவி வருகிறது.
சட்டீஸ்கர் மாநில சமஸ்கிருத வாரியத்தின் தலைவர் என்பது கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உரிய பதவியாகும். அதில் ஒருவருவர் கொலை செய்தநபருக்கு பாராட்டு தெரிவியுங்கள் என்று பேசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், அம்பிகாபூர் மாவட்டத்தில், விராட் இந்து சம்மேளன மாநாடு நேற்று நடந்தது. இதில் சட்டீஸ்கர் மாநில சமஸ்கிருத வாரியத்தின் தலைவர் பரத்மானாந்த் கலந்து கொண்டுபேசினார். அவர் பேசியதாவது-
வேதங்களில் பசுக்களை கொல்பவர்களை கொலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால், பசுக்களை கொலை செய்பவர்களை கொல்லும் மக்களுக்கு ராஜஸ்தான் அரசுகவுரவிக்க வேண்டும். அவர்கள் சட்டீஸ்கர் மாநிலம் வந்தால், அவர்களை நானும், சட்டீஸ்கர்மாநில அரசும் கவுரவிப்போம்.
பசுக்கொலை செய்பவர்கள் எல்லாம் கிரிமினல்கள் என்று பிரதமர் மோடி சமீபத்தில் பேசியுள்ளார். எப்படி அவர் அவ்வாறு பேச முடியும்? சிலர் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால், பசுக்களை பாதுகாப்பவர்கள் எல்லாம் கிரிமினல்கள் ஆகிவிடமாட்டார்கள்.
நாட்டில் ஆங்கிலப் பள்ளிகளை தடை செய்ய வேண்டும். நான் ஒருநாள் பிரதமராக ஆனால், முதலில் இதைத்தான் செய்வேன்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிவருகிறது.