
காக்கிநாடாவில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயிலில் இருந்து ஒரு டன் ரேசன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
காக்கிநாடாவில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து காக்கிநாடாவில் இருந்து கிளம்பிய ரயிலை நிறுத்தி சோதனை மேற்கொள்ளுமாறு ரயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதைதொடர்ந்து ஜோலார் பேட்டையில் ரயிலை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலில் ஒரு டன் ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டு கடத்த இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.