வைரஸ் காய்ச்சல் பரவுவதன் எதிரொலி... புதுவையில் நாளை முதல் செப்.25 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!!

By Narendran SFirst Published Sep 16, 2022, 9:20 PM IST
Highlights

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் பரவி வரும் காரணத்தால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் பரவி வரும் காரணத்தால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக பல்வேறு காரணங்களால் 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. பல குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் அதிகமாகி உள்ளது.

இதையும் படிங்க: 56 இன்ச் மோடி ஜி தாலி அறிமுகம்... சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.8.5 லட்சம்.. அறிவித்த டெல்லி உணவகம்!!

இந்த பாதிப்பு காரணங்களால் குழந்தைகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடன் மற்ற குழந்தைகள் தொடர்பில் இருப்பதால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், சளி அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஏற்கனவே பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானி.. ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கி நெகிழ்ச்சி..

இதனால் சில நாட்களுக்கு 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை மூட அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. இதனால் புதுச்சேரியில் குழந்தைகளுக்கான காய்ச்சல் பாதிப்பு குறையலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

click me!