இந்துக்கள் முஸ்லிம்களின் பார்முலாவைப் பின்பற்றி இளம் வயதிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று அசாம் மாநில, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐடியுஎப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார்.
இந்துக்கள் முஸ்லிம்களின் பார்முலாவைப் பின்பற்றி இளம் வயதிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று அசாம் மாநில, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐடியுஎப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார்.
அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐடியுஎப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் நிருபர்களுக்குப் பேட்டியிளித்தார் அப்போது அவர் பேசியதாவது:
50 கி.மீ பேரணி!16 தொகுதிகள்: மெகாபேரணியில் பிரதமர் மோடி பிரச்சாரம்:10 லட்சம் பேர் திரண்டனர்
முஸ்லிம் இளைஞர்கள் 20 முதல் 22 வயதிலேயே திருமணம் செய்துவிடுகிறார்கள். முஸ்லிம் பெண்களும் 18வயதிலேயே திருமணம் செய்து விடுகிறார்கள். அரசின் சட்டப்பூர்வ வயதைக் கடந்துதான் திருமணம் நடக்கிறது. ஆனால் இந்துக்கள் திருமணத்துக்குமுன்பே, ஒன்று அல்லது இரண்டு அல்லது 3 சட்டவிரோதமாக மனைவிகள் வைத்துள்ளார்கள். அவர்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டாலும், மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள், பணம் சேர்க்கிறார்கள்.
40வயதுக்கு பின் திருமணம் செய்தால், குழந்தை வளர்ப்பு என்ற அழுத்தம் ஏற்படும். 40வயதுக்கு மேல் ஒரு குழந்தையை எவ்வாறு தாங்குவார் என எதிர்பார்க்க முடியும். செழுமையான நிலத்தில் பயிரிட்டால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும், நன்றாக வளர்ச்சி அடையும்.
ஆதலால், இந்துக்கள் முஸ்லிம்கள் பார்முலைப் பின்பற்ற வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும். ஆண்களுக்கு 20 முதல் 22 வயதிலும், பெண்களுக்கு 18 முதல் 20வயதிலும் திருமணம் செய்து வைக்க வேண்டும். அதன்பின் பாருங்கள் எத்தனை குழந்தைகள் பிறக்கிறது.
மும்பையில் திடீரென ஒரு மாதம் ஊரடங்கு: காரணம் என்ன? மும்பை போலீஸார் திடீர் உத்தரவு
அசாம் முதல்வர் லவ் ஜிஹாத் பற்றி பேசியுள்ளார். இந்தியான் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா இருக்கிறார். அவரை யார் தடுக்க முடியும், நீங்கள் 4 அல்லது 5 லவ் ஜிஹாத் திருமணம் செய்யுங்கள் எங்கள் முஸ்லிம் பெண்களை கூட்டிச் செல்லுங்கள். நாங்கள் வரவேற்கிறோம், சண்டையிடக்கூடமாட்டோம். உங்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரியட்டும்.
இவ்வாறு அஜ்மல் தெரிவித்தார்